சிறு மற்றும் நடுத்தரத் தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு உர மானியம் வழங்கும் புதிய திட்டம் இன்று (அக்டோபர் 1) முதல் அமுலுக்கு வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாக, பயனாளிகள் தங்களுக்கான QR குறியீட்டை தயாரித்து, தேசிய உரச் செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட உர நிறுவனங்களிடம் வழங்கி, மானியத்துடன் உரத்தைப் பெற முடியும்.
மாநாட்டின் ஆரம்பகட்டமாக, 50 கிலோ உரப்பொதி ரூ.4,000க்கும், 25 கிலோ உரப்பொதி ரூ.2,000க்கும் விநியோகிக்கப்படும். 2025ஆம் ஆண்டு இந்த மானியத்திற்காக ரூ.2,000 மில்லியன் நிதி அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் உர விநியோகத்தில் வெளிப்படைத்தன்மையும், சரியான பயனாளிகளிடம் மானியம் செல்வதற்கான உறுதிப்பாடும் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.








