Saturday, April 18, 2026
No menu items!

உள்ளூராட்சிமன்றத் தேர்தல்

கொழும்பு மாநகர சபையில் உறுதியாக நாங்களே ஆட்சியமைப்போம் – விஜித ஹேரத்!

“உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் 50 சதவீதம் ஆட்சி அதிகாரம் கிடைக்காத சபைகளிலும் தேசிய மக்கள் சக்தியே நிச்சயமாக ஆட்சியமைக்கும். தற்போது வரையிலும் பல்வேறு குழுக்கள் எங்களுடன் கலந்துரையாடி இருக்கிறார்கள். கொழும்பு மாநகர சபையில் ஆட்சி அமைப்பதற்கு ஒத்துழைப்பை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். எனவே, கொழும்பு மாநகர சபையில் உறுதியாக நாங்களே ஆட்சியமைப்போமென்று” அமைச்சர் விஜித...

அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு அழைப்பு விடுத்த தேர்தல் ஆணைக்குழு!

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் செலவுகள் மற்றும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள், சுயாதீன குழுக்கள் செலவிடக் கூடிய தொகை தொடர்பில் விரைவில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். அதற்கமைய  சனிக்கிழமை (3/22/2025) அங்கீகரிக்கப்பட்ட சகல அரசியல் கட்சிகளின் செயலாளர்களும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இம்முறை உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் சுமார் 80...

வேட்பாளர் பட்டியலில் கையொப்பமிட வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்ட நபர் தப்பியோட்டம்!

நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பிரயத்தனைங்களை மேற்கொண்டிருந்தது. இந்நிலையில் போரதீவுப்பற்று உள்ளூராட்சி மன்றத்திற்கு வேட்பாளரை தேர்வு செய்வதற்கு அரசியல் கட்சி ஒன்று மிகவும் பிரயத்தனத்தில் ஈடுபட்டிருந்தது. இந்நிலையில் அப்பிரதேசத்திலுள்ள வட்டாரம் ஒன்றில் போட்டியிடுவதற்காக அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரை அரசியற்கட்சி ஒன்று கட்டாயத்தின் பெயரில் அவர்களுடைய...

இலங்கைத் தமிழரசுக்கட்சி தனித்தே போட்டியிடும் – எம்.ஏ.சுமந்திரன்..!

இலங்கைத் தமிழரசுக்கட்சி உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தனித்தே போட்டியிடுகின்றது. அதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக போட்டியிடும் பேச்சுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அக்கட்சியின்பதில் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கூட்டம் சனிக்கிழமை (08/03/2025) மாலை மட்டக்களப்பில் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சாணக்கியன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரும்...

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் – கட்டுப்பணம் ஏற்றுக்கொள்ளல் ஆரம்பம்..!

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் இன்று (03/03/2025) முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 19ஆம் திகதி வரை கட்டுப்பணம் செலுத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், 8, 9, 13, 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் கட்டுப்பணம் ஏற்றுக்கொள்ளப்படாது என்று தேர்தல்...

உள்ளூராட்சிமன்றத் தேர்தல்கள் சம்பந்தமாகத் இலங்கை தமிழரசுக் கட்சி கலந்துரையாடல்!

உள்ளூராட்சிமன்றத் தேர்தல்கள் சம்பந்தமாகத் தொகுதி ரீதியாக இலங்கை தமிழரசுக் கட்சி கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், தொகுதி ரீதியாக கலந்துரையாடல்கள் நடத்தப்படுவதுடன், மாவட்ட ரீதியாகக் கலந்துரையாடி இறுதி தீர்மானங்கள் எட்டப்பட வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு தொகுதிகளிலும் போட்டியிடவுள்ள முறைமை தொடர்பில் தங்களது உறுப்பினர்களுடன் கலந்துரையாடப்படுவதாகவும் முன்னாள் நாடாளுமன்ற...

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை மார்ச் மாதம் 21 ஆம் திகதியின் பின்னர் நடத்த கோரிக்கை; எதிர்க் கட்சி!

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான நடவடிக்கைகளை எதிர்வரும் மார்ச் மாதம் 21 ஆம் திகதியின் பின்னர் ஆரம்பிக்குமாறு எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சியை சேர்ந்த பிரதான கட்சிகள் தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளன. இதுதொடர்பில் எதிர்க்கட்சித் தரப்பினர் நேற்று (18) தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்தச் சந்திப்பில் எதிர்க்கட்சி உறுப்பினர்களான...

மஹிந்தவுக்கு பாதிப்பு ஏற்பட்டால் கலவரம் தோற்றம் பெறும் – பிரமித்த பண்டார..!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு நாட்டுக்கு முக்கியமானது. அவருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் இந்த நாட்டில் மீண்டும் கலவரம் தோற்றம் பெறும். உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிடுவது தொடர்பில் அனைவருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் எதிர்வரும் வியாழக்கிழமை (30/1/2025) பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் என முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார...

பெப்ரல் அமைப்பின் எச்சரிக்கை-நீதிமன்றம் செல்வோம்..!

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை காலம் தாழ்த்த முயன்றால் மீண்டும் நீதிமன்றம் செல்வோம் என பெப்ரல் அமைப்பு எச்சரித்துள்ளது. இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நீதிமன்றத்தில் ஆட்சேபனை முன்வைக்கப்பட்டாலன்றி, உள்ளூராட்சிமன்றத் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு வேறு எந்த வாய்ப்பும் இல்லை. எனவே புதிய வேட்புமனுவைக் கோருவதற்கு 23ஆம் திகதி வரை நீதிமன்றத்தில் ஆட்சேபனை தெரிவிக்கப்படாவிட்டால் சட்டத்தை நிறைவேற்றி ஏப்ரல் முதல்...

மலையகத்திலும் அர்ச்சுனா எம்.பியின் குரலா? – பரபரப்பை ஏற்படுத்தும் பதிவு..!

எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் மலையக மாவட்டங்களில் களமிறங்குவது குறித்து ஆலோசித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சையாக யாழ் மாவட்டத்தில் போட்டியிட்ட இராமநாதன் அர்ச்சுனா வெற்றிபெற்று நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகினார். தற்போது உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அவரது அணியினர் ஆலோசித்துவரும் பின்புலத்தில், மலையகத்தில் போட்டியிடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாக அவர் தமது...
- Advertisement -spot_img

Latest News

மீன்பிடி படகில் இருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு

பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார்...
- Advertisement -spot_img