Saturday, May 9, 2026
No menu items!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்

உள்ளூராட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு…!

ஏப்ரல் மாதத்திற்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல் ஆணையர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தல்கள் தொடர்பான சிறப்பு ஏற்பாடுகள் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னரே தேர்தல்கள் தொடர்பான முடிவுகள் சாத்தியமாகும் என்று அவர் கூறினார். மாத்தறை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது சமன் ஸ்ரீ ரத்நாயக்க...

பொதுஜன பெரமுனவின் பிரச்சார நடவடிக்கைகள் ஒத்திவைப்பு..!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரச்சார நடவடிக்கைகள் அடுத்த மாதம் 2ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. பிரச்சார நடவடிக்கைகளை அனுராதபுரத்தில் இன்று ஆரம்பிப்பதற்கு முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், நிலவும் பாதகமான காலநிலையை கருத்திற் கொண்டு பிரச்சாரத்தைத் தொடங்குவது பொருத்தமானதல்ல என்று கட்சிப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். கட்சிப் பிரதிநிதிகளின் கருத்துக்களின் அடிப்படையிலேயே இந்த முடிவு எட்டப்பட்டதாக...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்த  SLPP!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் நாளை (25) அனுராதபுரத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிக்கவுள்ளது. ஜய ஸ்ரீ மஹா போதி மற்றும் ருவன்வெலிசேயாவில் சமய அனுஷ்டானங்களுடன் பிரச்சாரம் ஆரம்பமாகிறது, அதன் பின்னர் வணக்கத்திற்குரிய பல்லேகம ஹேமரத்தன தேரரை சந்திக்கும். கட்சியின் திட்டங்களைக் கோடிட்டுக் காட்டவும், ஆதரவைப்...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான மனு விசாரணைக்கு!

அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான சட்டமூலத்தின் சில ஏற்பாடுகள் அரசியலமைப்புக்கு முரணானது என்று தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு எதிர்வரும் 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பரால் முன்வைக்கப்பட்டிருந்தது. இந்த மனு...

தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை!

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளையதினம் நடைபெறவுள்ளது. இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சீ.வி.கே சிவஞானம் தலைமையில் இந்த கூட்டம் திருகோணமலையில் நடைபெறவுள்ளது. இதன்போது, கட்சிக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு, கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள ஒழுக்காற்று நடவடிக்கை, இலங்கை தமிழரசுக் கட்சியின் மாநாடு, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் உள்ளிட்ட...

உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் சட்டத்தில் திருத்தம் – வெளியானது வர்த்தமானி..!

2023 ஆம் ஆண்டின் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்து புதிய வேட்புமனுக்களை கோரும் வகையில் உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரின் உத்தரவுக்கமைய இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, 2023 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த உள்ளூராட்சி...

உயர்தரப் பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு..!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பரீட்சையின் போது வேட்பாளர்கள் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்தால் பரீட்சைக்கு இடையூறு ஏற்படும் என்பதால் குறித்த பரீட்சை முடியும் வரை தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிடாதிருக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக, பரீட்சை சில...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக அமைச்சர் விஜித ஹேரத்தின் அறிவித்தல்..!

நாட்டில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் 2025ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றதை தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் கடந்த 14ஆம் திகதி நடத்தப்பட்டது. இந்நிலையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் நடத்த...

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நாளை; தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நாளை (26) நடைபெறவுள்ளது. அதன்படி, தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகள் மற்றும் ஏனைய பொருட்கள் அனைத்தும் இன்று (25) உரிய நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தலுக்காக 600 அரச அதிகாரிகளும், 500 காவல்துறை உத்தியோகத்தர்களும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக காலி மாவட்ட தேர்தல் அதிகாரி டபிள்யூ. ஏ. தர்மசிறி குறிப்பிட்டுள்ளார். 48...

இடது கை பெருவிரலில் மை பூச தீர்மானம் : தேர்தல்கள் ஆணைக்குழு!

எல்பிட்டி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், வாக்களித்ததனை உறுதிப்படுத்தும் வகையில் வாக்காளரின் இடது கை பெருவிரலில் அடையாளம் இடப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று(17.10) வெளியிடப்பட்டுள்ளது. கடந்த செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற நிலையில், வாக்களிப்பின் போது வாக்காளரின்...
- Advertisement -spot_img

Latest News

விசிக தலைவரை சந்திக்கும் விஜய்!

தமிழக சட்ட சபைத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை கைப்பற்றியது. ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில்,விசிக இந்திய...
- Advertisement -spot_img