உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரச்சார நடவடிக்கைகள் அடுத்த மாதம் 2ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

பிரச்சார நடவடிக்கைகளை அனுராதபுரத்தில் இன்று ஆரம்பிப்பதற்கு முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தது.
இருப்பினும், நிலவும் பாதகமான காலநிலையை கருத்திற் கொண்டு பிரச்சாரத்தைத் தொடங்குவது பொருத்தமானதல்ல என்று கட்சிப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கட்சிப் பிரதிநிதிகளின் கருத்துக்களின் அடிப்படையிலேயே இந்த முடிவு எட்டப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
இதன்படி, அடுத்த மாதம் 2ஆம் திகதி கட்சியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரச்சாரப் பணிகளைத் தொடங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன திட்டமிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here