Sunday, June 7, 2026
No menu items!

எல்பிட்டிய பிரதேச சபை

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தல்…!

எல்பிட்டிய பிரதேச சபையின் தலைவர் மற்றும் உப தலைவரை அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. எல்பிட்டிய பிரதேச சபையின் தவிசாளராக கொழம்ப தந்திரிகே நிஷாந்த பெரேராவை தெரிவு செய்து தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. அதன் உப தவிசாளராக வகொட பத்திரகே சுமித் சந்தன்  தெரிவு செய்யப்பட்டதாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு!

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளன. இந்தநிலையில், எதிர்வரும் சனிக்கிழமை 48 வாக்களிப்பு நிலையங்களில் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதற்கான முதற்கட்டப் பணிகள் பூர்த்தியாகியுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. <!-- -->

தேர்தல் ஆணைக்குழுவின் அறிவித்தல்…!

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் செலவிடக்கூடிய தொகை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் காலங்களில் வெளியிடப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. காலி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தேர்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு…!

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் செலவிடக்கூடிய அனுமதிக்கப்பட்ட தொகை தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு எதிர்வரும் காலங்களில் வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. காலி மாவட்ட செயலகத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அதன் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். எல்பிட்டிய...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எல்பிட்டிய பிரதேச சபைக்கான வேட்புமனு கோரல்…

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எல்பிட்டிய பிரதேச சபைக்கான வேட்புமனுத் தாக்கல் செப்டெம்பர் 09 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 12 ஆம் திகதி வரை கோரப்பட்டுள்ளது. இது தொடர்பான வேட்புமனுக்கள் காலி மாவட்ட செயலகத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி இன்று (26.08) முதல் செப்டெம்பர் 11 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி...
- Advertisement -spot_img

Latest News

யாழில் 220 கிலோ கேரள கஞ்சா கண்டெடுப்பு!

யாழ்ப்பாணத்தின் அந்தணிபுரம் பகுதியில் 220 கிலோ எடையுள்ள 102 கேரள கஞ்சா பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உளவுத்துறை தகவலுக்கமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இன்று (07)...
- Advertisement -spot_img