Tuesday, September 29, 2026
No menu items!

ஓட்டுநர்

சுற்றுலா வாகனங்கள் குறித்து அரசாங்கம் வெளியிட்டுள்ள புதிய பரிந்துரைகள்!

எல்ல - வெள்ளவாய பள்ளத்தாக்கில் ஏற்பட்ட பேருந்து விபத்தின் பின்னணியில், நாட்டில் சுற்றுலா வாகனங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் இறுதி அறிக்கையில் பல முக்கிய பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. முக்கிய பரிந்துரைகளாக: முன்கூட்டிய பயண திட்டம்: வாகன உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், பயணத் திட்டத்தை முன்கூட்டியே சமர்ப்பித்து, அதிகாரப்பூர்வ...

இராகலை – நுவரெலியா பிரதான வீதியில் பாரவூர்தி உந்துருளியுடன் மோதி விபத்து; ஒருவர் பலி!

இராகலை - நுவரெலியா பிரதான வீதியில் உள்ள ஹாவா - எலிய காட்டுச் சந்தியில் நேற்று (செப்டம்பர் 21) இரவு, அதிவேகமாக வந்த ஒரு பாரவூர்தி ஊந்துருளியில் பயணம் மேற்கொண்ட இளைஞருடன் மோதியதில், உந்துருளி ஓட்டுநர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் ஹாவா - எலிய பகுதியில் வசிக்கும் மானெத் அபூர்வா என அறியப்படுகிறார். நுவரெலியா நகரத்திற்குள் நுழைவதற்காக காட்டுச்...

நாடு முழுவதும் கடந்த 7 மாதங்களில் 68 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவு- பொலிஸார் எச்சரிக்கை!

இந்த வருடத்தில் கடந்த 7 மாதங்களில் நாடு முழுவதும் 68 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (14) பொலிஸ் ஊடகப் பிரிவின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் இதனைத் தெரிவித்தார். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் 2025.01.01...

இ.போ.ச பேருந்து மரத்துடன் மோதி விபத்து – 12 பேர் காயம்..!

சிலாபம் – புத்தளம் வீதியில் பந்துலு ஓயா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர். இன்று (3/17/2025) காலை நிக்கவெரட்டியவிலிருந்து கொழும்புக்குச் சென்ற இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலுள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் பேருந்து ஓட்டுநர்...

கிணற்றுக்குள் விழுந்தவரை காப்பாற்ற முயன்றவர் உயிரிழப்பு..!

கிணற்றுக்குள் விழுந்த நபர் ஒருவரை காப்பாற்றுவதற்காக முயற்சித்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ள சோகமான சம்பவம் ஒன்று தமிழகத்தின் சத்தியமங்கலம் பகுதியில் நிகழ்ந்துள்ளது. கார் ஒன்றினை பின்புறம் செலுத்திய போதே ஓட்டுநர் காருடன் கிணற்றுனுள் விழுந்துள்ளார். குறித்த நபரை மீட்பதற்காக நால்வர் கிணற்றுனுள் இறங்கியுள்ளனர். இவர்களில் ஒருவர் மூச்சுதிணறலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முச்சக்கர வண்டியும் பேருந்தும் மோதி விபத்து; இருவர் பலி!

மடம்பே கலஹிடியாவா பகுதியில் முச்சக்கர வண்டியும் பேருந்தும் மோதிய விபத்தில் ஒரு இளம் பெண் உட்பட மூன்று பெண்கள் உயிரிழந்தனர். விபத்து நடந்த நேரத்தில் முச்சக்கர வண்டியில் ஓட்டுநர் உட்பட 9 பேர் பயணித்ததாக போலீசார் தெரிவித்தனர். சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் மினுவங்கொட மற்றும் ராகம பகுதிகளைச் சேர்ந்த 32, 36 மற்றும் ஒரு வயதுடைய பெண்கள் என...

சாரதி அனுமதிப்பத்திரம் செய்து தருவதாக கூறி ஏமாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

சாரதி அனுமதிப்பத்திரம் செய்து தருவதாக கூறி செவித்திறன் குறைபாடுள்ள நபர் உட்பட பலரை ஏமாற்றிய முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை கைதுசெய்துள்ளதாக பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபரிடமிருந்து இரண்டு தற்காலிக ஓட்டுநர் உரிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கான்ஸ்டபிள் கைதுசெய்யும்போது, நபர் ஒருவருக்கு வழங்கிய தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்தை பறித்து வாயில் போட்டு அழித்துள்ளார். பொரலஸ்கமுவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய...
- Advertisement -spot_img

Latest News

பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல் 

மட்டக்களப்பில் 2008-ல் இடம்பெற்ற 5 கொலைகள் தொடர்பாக கைதாகியுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையான், எதிர்வரும் ஒக்டோபர் 13 வரை விளக்கமறியலில்...
- Advertisement -spot_img