எல்ல – வெள்ளவாய பள்ளத்தாக்கில் ஏற்பட்ட பேருந்து விபத்தின் பின்னணியில், நாட்டில் சுற்றுலா வாகனங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்காக அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் இறுதி அறிக்கையில் பல முக்கிய பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
முக்கிய பரிந்துரைகளாக:
முன்கூட்டிய பயண திட்டம்:
வாகன உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், பயணத் திட்டத்தை முன்கூட்டியே சமர்ப்பித்து, அதிகாரப்பூர்வ அனுமதி பெற வேண்டும்.
புதிய ஒழுங்குமுறை அமைப்பு:
சுற்றுலா வாகனங்களை ஒழுங்குபடுத்த, தேசிய போக்குவரத்து ஆணையகம் அல்லது புதிய அமைப்பு ஒன்றை உருவாக்க பரிந்துரை.
பதிவும் விதிமுறைகளும்:
அனைத்து சுற்றுலா வாகனங்களும் இந்த அமைப்பில் பதிவு செய்யப்பட வேண்டும். அவை அதன் விதிமுறைகளுக்கு கட்டுப்பட வேண்டும்.
ஓட்டுநருக்கான ஓய்வுத் திட்டம்:
ஒவ்வொரு 7.5 மணி நேரப் பயணத்திற்கு பிறகு, குறைந்தது 30 நிமிட ஓய்வு.
ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் பிறகு, 10 மணி நேர தொடர் ஓய்வு.
பாதுகாப்பு கருவிகள்:
வாகனத்தின் உள்ளே மற்றும் வெளியே பாதுகாப்பு கேமராக்கள் கட்டாயம் நிறுவப்பட வேண்டும்.
ஓட்டுநர் மற்றும் உதவியாளர்:
ஒவ்வொரு வாகனத்துக்கும் ஒரு நிரந்தர ஓட்டுநர் பெயரிடப்பட வேண்டும்.
நீண்ட பயணங்களுக்கு, கூடுதலாக ஒரு உதவி ஓட்டுநர் பணியமர்த்தப்பட வேண்டும்.
வாகன ஆய்வு:
பயணம் தொடங்கும் முன், ஓட்டுநர் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் வாகனத்தை சோதித்து, இயக்கத்திற்குத் தகுதியானதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
வழிகாட்டுதல் வரைபடம்:
புதிய ஓட்டுநர்களுக்கு அபாயகரமான பகுதிகளை விளக்கும் வழிகாட்டுதல் வரைபடம் வழங்கப்பட வேண்டும்.
வளைவுகள் குறியீடு:
அபாயகரமான வீதிகளில் உள்ள ஒவ்வொரு வளைவுக்கும் எண் குறியீடுகள் மற்றும் எச்சரிக்கை பலகைகள் நிறுவப்பட வேண்டும். இது, ஓட்டுநர்களுக்குத் துல்லியமான தகவலை வழங்கும்.








