Thursday, November 12, 2026
No menu items!

கடற்கரை

275 மில்லியன் செலவில் கும்புறுமூலை கடற்கரை வீதி புணரமைக்கும் பணிகள் ஆரம்பம்!

கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கும்புறுமூலை கடற்கரை வீதியானது 275 மில்லியன் செலவில் காபெட் வீதியாக புணரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ. சந்திரகாந்தன் அவர்களின் அழைப்பை ஏற்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இரண்டு நாள் விசேட விஜயமொன்றை  மேற்கொண்டிருந்த போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும்...

அடையாளம் தெரியாத நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு செட்டிபாளையம் கடற்கரையில் நேற்றைய தினம் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் மீட்டகப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக  பொதுமக்கள் பொலிசாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தை மீட்டுள்ளனர். பின் நீதிமன்ற அனுமதியை பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துவருவதாக...

கடற்கரையில் நீந்திய வெளிநாட்டவர் உயிரிழப்பு!

மலேசிய பிரஜை ஒருவர் நேற்று மாலை உனவடுனா கடற்கரையில் கடலில் நீராடச் சென்ற போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 61 வயதானவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த வெளிநாட்டவர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள நீரோட்டத்தினால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர். அவர் உயிர்காப்பாளர்களால் மீட்கப்பட்ட போதிலும், மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.  

பயண இடங்களின் பட்டியலில் வெளியீடு :2ஆம் இடத்தை பிடித்த இலங்கை

ஆசியாவின் மிகப் பிரபலமான பயண இடங்களின் பட்டியலில் இலங்கை 2ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய ஊடகமான தி டைம்ஸ் ஒப் இந்தியா குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இலங்கையின் கலாசார பாரம்பரியம், பசுமையான தேயிலைத் தோட்டங்கள், கடற்கரைகள் மற்றும் வனவிலங்குகளுக்கு புகழ்பெற்ற இடமாக இலங்கை திகழ்வதாக தி டைம்ஸ் ஒப் இந்தியா தெரிவித்துள்ளது. குறித்த பட்டியலில், இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்நாம்,...

துனிசியா கடற்கரையில் பயணித்த படகில் இருந்து 23 பேர் மாயம்..!!

துனிசிய கடற்கரையில் 23 பேரைக் காணவில்லை என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. காணாமல் போனவர்களின் குடும்பங்கள் அவர்களுடனான தொடர்பை இழந்துள்ளதாகவும் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் தேசிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் காணாமல் போனவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்படவில்லை. வடகிழக்கு நாபியூல் கவர்னரேட்டில் உள்ள கோர்பா...
- Advertisement -spot_img

Latest News

ஐஸ் மற்றும் குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

உனவட்டுன பகுதியில் நேற்று (10) இரவு நடத்தப்பட்ட பொலிஸ் சோதனையில் 'ஐஸ்' மற்றும் 'குஷ்' போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காலி மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகள்...
- Advertisement -spot_img