Thursday, April 23, 2026
No menu items!

கணேமுல்ல சஞ்சீவ

கணேமுல்ல சஞ்சீவவின் கொலை குற்றவாளியின் மற்றொரு சம்பவம் அம்பலமானது!

பாதாள உலகக் கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி, கடந்த ஆண்டு டிசம்பரில் கந்தானையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட துப்பாக்கிதாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார். டிசம்பர் 13, 2024 அன்று கந்தானையில் உள்ள ஒரு வீட்டில் சமிந்து தில்ஷான் பியுமாங்க கந்தானாராச்சி துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அப்பகுதியை விட்டு...

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு சிம் அட்டைகளை வழங்கியவர்கள் கைது!

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேகநபர்கள் மினுவங்கொடை பகுதியில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மினுவங்கொடையை சேர்ந்த 28 மற்றும் 31 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலைக்கு உதவிய குற்றச்சாட்டிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குற்றத்தைச் செய்யப் பயன்படுத்திய சிம் அட்டைகளை வழங்கி கொலைக்கு உதவியதற்காகவும்...

கொலையாளிகளுக்கு அரசாங்கம் அஞ்சுகின்றதா? – சபையில் சாணக்கியன்..!

கடந்த காலங்களில் கொலைகளிலும் மற்றும் சூழ்ச்சிகளிலும் ஈடுபட்ட குழுக்களுக்கு அரசாங்கம் அஞ்சுகின்றதா என்ற சந்தேகங்கள் நிலவுவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (28/02/2025) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டு வரவு,செலவு திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுகளின் செலவு தலைப்புகளின் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே...

கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பில் வெளியான தீர்ப்பு!

கணேமுல்ல சஞ்சீவவின் மரணம், துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் மார்பு, கழுத்து மற்றும் வயிற்றில் ஏற்பட்ட பல காயங்களால் ஏற்பட்டதாக கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இன்று (28) தீர்ப்பளித்தார். இந்த சம்பவம் தொடர்பான மாஜிஸ்திரேட்டின் விசாரணையின் முடிவில் மாஜிஸ்திரேட் இந்த உத்தரவைப் பிறப்பித்தார். இந்த மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கையையும் கொழும்பு பிரிவு நீதிமன்றத்தில்...

மினுவாங்கொடை துப்பாக்கிச் சூடு – பெண் உள்ளிட்ட இருவர் கைது..!

மினுவாங்கொடை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளின் உரிமையாளரான பெண் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 26 ஆம் திகதி புதன்கிழமை கணேமுல்ல சஞ்சீவ கொலையை திட்டமிட்டதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள கெஹெல்பத்தர பத்மே என்பவரின் நெருங்கிய ஒருவர் மீதே  மினுவாங்கொடை பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. மினுவாங்கொடை - பத்தடுவன...

கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக நீதிமன்றத்தில் இரகசிய அறிக்கை சமர்ப்பிப்பு!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக நீதிமன்றத்தில் இரகசிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விசாரணையை மேற்கொண்டு வரும் கொழும்பு குற்றப்பிரிவு, கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலியின் அதிகாரப்பூர்வ அறையில் தொடர்புடைய அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அறிக்கையின்படி, நீதிமன்றம் காவல்துறைக்கு பல உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது. அதன்படி, பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் குழுவிடமிருந்து வாக்குமூலங்கள் பெறப்பட...

இஷாரா செவ்வந்தி தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய தற்போது தலைமறைவாகியுள்ள இஷாரா செவ்வந்தி, கடுவெல வெலிவிட்ட பகுதியில் உள்ள கடையொன்றில் சிம் அட்டை ஒன்றை வாங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 19 ஆம் திகதி கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்டார். அதற்கு முந்தையநாள் 18 ஆம் திகதி துப்பாக்கிதாரி என சந்தேகிக்கப்படும் நபரும் ,இதற்குத் திட்டங்களை வகுத்ததாகத் தெரிவிக்கப்படும் இஷாரா...

தொடரும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் – பழிதீர்க்கும் செயலா?

கெஹெல்பத்தர பத்மேவின் பாடசாலை நண்பர் ஒருவரை இலக்கு வைத்து நேற்று (26/02/2025) மினுவங்கொடை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமானது, கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர். அதற்கமைய, கரந்தெனிய சுத்தா மற்றும் ஹீனடியன மஹேஷ் ஆகிய குற்றச் செயல்களில் ஈடுபடுவோரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என...

குற்றக் குழுக்களுக்கிடையிலான மோதல்கள் – பொலிஸாரின் நடவடிக்கை என்ன?

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையைத் தொடர்ந்து நாட்டில் மீண்டும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுக்கு இடையே இடம்பெற்று வரும் மோதல்கள் குறித்து பொலிஸார் அவதானம் செலுத்தி வருகின்றனர். கணேமுல்ல சஞ்சீவவின் குழுவினருக்கும் டுபாயில் தலைமறைவாகியுள்ளதாகக் கூறப்படும் கெஹேல்பெத்தர பத்மேவின் குழுவினருக்கும் இடையே இவ்வாறு மோதல்கள் ஆரம்பமாகியுள்ளன. அண்மையில், கணேமுல்ல சஞ்சீவ புதுக்கடை நீதவான் நீதிமன்றில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார். இது...

கணேமுல்ல சஞ்சீவ கொலையின் சந்தேக நபரின் தாய் மற்றும் சகோதரர் கைது!

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் தேடப்படும் பிரதான சந்தேக நபரின் தாய் மற்றும் சகோதரரை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சந்தேக நபர்கள் கொழும்பு குற்றப்பிரிவால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img