Friday, November 13, 2026
No menu items!

கல்வி அமைச்சு

பாடசாலை மாணவர்களுக்கான மகிழ்ச்சி தகவல்!

மகா சிவராத்திரியை முன்னிட்டு நாளை மறுநாள் சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள தமிழ்ப் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைச்சின் செயலாளர் பி.ஏ.சி.பி. பமுனுஆராச்சியின் கையொப்பத்துடன் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விடுமுறை வழங்கவும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது. மேலும் மார்ச் முதலாம் திகதி பாடசாலைகளில் கல்வி...

அதிகரிக்கும் வெப்பமான வானிலை..!

வெப்பமான வானிலையானது இன்றைய தினமும் மனித உடலால் உணரப்படும் அளவை விட அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும், இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் வெப்பமான வானிலை நிலவக்கூடுமென அந்த திணைக்களம் அறிவித்துள்ளது. நிலவும் வெப்பமான வானிலையினால் பணியிடங்களில் உள்ளவர்கள் அதிகளவான நீரைப் பருக...

கல்வி வவுச்சர் மோசடி – றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி எச்சரிக்கை!

கல்வி அமைச்சு ஏழை மாணவர்களுக்கு வழங்கிய 6000 ரூபாய் பெறுமதியான கல்வி வவுச்சர் திட்டத்தை சில வர்த்தக நிறுவனங்கள் துஷ்பிரயோகம் செய்யும் சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இது மாணவர்களின் கல்வி உரிமைக்கு எதிரான பெரிய குற்றமாகும். மாணவர்களுக்கு தேவையான பொருட்களுக்கு பதிலாக, தேவையற்ற பொருட்களை விற்பனை செய்ய முயற்சி, வவுச்சர் மூலம் வாங்கும் பொருட்களை அதிக...

வெப்பமான வானிலை காரணமாகப் பாடசாலை மாணவர்களை அவதானிக்கும் கல்வி அமைச்சு..!

நாட்டில் நிலவும் வெப்பமான வானிலை காரணமாகப் பாடசாலை மாணவர்கள் செயற்படும் விதத்தை உன்னிப்பாக அவதானித்து வருவதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போதைய நாட்களில் கல்வி நடவடிக்கைகள் குறித்து ஏதேனும் ஆலோசனைகள் வழங்கப்படுமாயின் அது தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறும் அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார். இது தொடர்பில் நாளைய தினம் (17)...

தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை..!

நாடு முழுவதும் உள்ள 88 தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. விண்ணப்பதாரர்களிடமிருந்து தரம் 1 முதன்மை சேவை அதிகாரிகள் 79 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. ‍ இந்த நேர்காணல்கள் பிப்ரவரி 6 முதல் 11 வரை இசுருபாவில் நடைபெறும் என்றும் கல்வி...

நாடளாவிய ரீதியில் அதிபர் சேவை தரம் ஒன்றுக்கு பற்றாக்குறை..!

நாடளாவிய ரீதியில் உள்ள 88 தேசிய பாடசாலைகளில் அதிபர் சேவை தரம் ஒன்றுக்கான பற்றாக்குறை நிலவுவதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, குறித்த வெற்றிடங்களுக்குத் தகைமை பெற்ற 79 அதிபர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படவுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஆறாம் திகதி தொடக்கம் 11திகதி வரையில் இசுறுபாயவில் இந்த நேர்முகத்தேர்வு இடம்பெறவுள்ளது.

முதலாம் தரத்திற்கான மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்!

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கான பாடசாலை மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கை இன்று இடம்பெறுகின்றது. கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய, தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் முதலாம் தர மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பமாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

இந்த ஆண்டுக்கான முதலாம் தவணை இன்று ஆரம்பம்!

2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதல் தவணை இன்று திங்கட்கிழமை ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி முதலாம் தவணை மூன்று பிரிவுகளாக நடைபெறவுள்ளதோடு, அதில் முதல் கட்டம் இன்று தொடக்கம் மார்ச் மாதம் 14 ஆம் திகதி வரை நடைபெறும். முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் 11 ஆம்...

மாணவிகள் எதிர்நோக்கும் சுகாதார பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்!

கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய, நாடு தழுவிய ரீதியில் பாடசாலைகளில் தரம் 6க்கு மேற்பட்ட மாணவிகள் எதிர்நோக்கும் சுகாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார். இந்தச் சந்திப்பு நேற்று புதன்கிழமை (22) அமைச்சு வளாகத்தில் இடம்பெற்றது. கல்வி அமைச்சின் சுகாதாரம் மற்றும் போஷாக்கு கிளையின் பணிப்பாளர், அந்த கிளையின் அதிகாரிகள், இலங்கை...

பரீட்சை வினாத்தாள்கள் கசிவு – கல்வி அமைச்சின் அதிரடி நடவடிக்கை..!

வடமத்திய மாகாணத்தில் 11 ஆம் வகுப்பு தவணை பரீட்சை வினாத்தாள்கள் மூன்று, தேர்வுக்கு முன்னதாகவே கசிந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரிக்க குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அது மாகாண கல்விச் செயலாளரின் உத்தரவின் பேரில், சம்பந்தப்பட்ட குழு 5 உறுப்பினர்களைக் கொண்டதாக மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், சம்பவம் தொடர்பாக சிறப்பு தணிக்கையை தொடங்க மாகாண...
- Advertisement -spot_img

Latest News

கஸ்ஸப தேரர் உட்பட 7 பேருக்கு விளக்கமறியல்

அனுராதபுரம் ருவன்வெலி சாய அருகில் நீதிமன்ற உத்தரவை மீறி சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த கஸ்ஸப தேரர் உட்பட 7 பேரை நவம்பர் 26 ஆம்...
- Advertisement -spot_img