Friday, November 13, 2026
No menu items!

கல்வி அமைச்சு

நாட்டில் ஆசிரியர் பற்றாக்குறை..!

நாடு முழுவதும் சுமார் 30,000 ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம் உள்ளிட்ட பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார். இதேவேளை, ஆசிரியர்களுக்கு மாற்றீடுகள் இன்றி இடமாற்றம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனால் பல...

பாடசாலையின் கற்றல் செயற்பாடுகள் இன்று ஆரம்பம்..!

அரச, அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளில் 2024ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்று ஆரம்பமாகின்றன. இதன்படி, சகல பாடசாலைகளினதும் மூன்றாம் தவணை கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 24ஆம் திகதி நிறைவடையும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் 2025ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை கற்றல் செயற்பாடுகள் இந்த மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதேநேரம் இந்த ஆண்டு தரம் ஒன்றுக்காக புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள மாணவர்களுக்கான...

பாடசாலைகளுக்கான கற்றல் செயற்பாடுகள் நாளை ஆரம்பம்..!

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் நாளை ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அத்துடன் அனைத்து பாடசாலைகளினதும் மூன்றாம் தவணை எதிர்வரும் 24 ஆம் திகதி நிறைவடையும் என அந்த அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த வருடத்திற்கான முதலாம் தவணையின் முதலாம்...

முதலாம் தரத்திற்கான மாணவர் சேர்க்கை எப்போது? – வெளியானது அறிவிப்பு..!

அரச பாடசாலைகள் மற்றும் தனியார் பாடசாலைகளில் 2025ஆம் ஆண்டுக்கான முதலாம் தரத்திற்கு மாணவர் சேர்க்கைக்கான திகதி குறித்த அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்படி, சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் முதலாம் தர மாணவர்களுக்கான வகுப்புகள் ஜனவரி 30ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை நடைபெறும் நாட்களில் ஏற்பட்டுள்ள மாற்றம்..!

வருடத்தில் 210 நாட்கள் பாடசாலை நாட்களாக காணப்பட்ட நிலையில் 2025 ஆம் ஆண்டு பாடசாலை நாட்களை 181 நாட்களாக குறைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதிகளவிலான பொது விடுமுறைகள் மற்றும் பாடசாலைகளின் முதலாம் தவணை தாமதமாகத் தொடங்குவதால், அரசப் பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் நடைபெறும் நாட்களை 181 ஆக குறைப்பதற்கு...

கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு..!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் 2024 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஜனவரி 2ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பாடசாலைகளின் மூன்றாம் தவணை ஜனவரி 24ஆம் திகதியுடன் முடிவடையும் என்று...

அதிபர் பதவி வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பான விசேட அறிவிப்பு..!

தேசிய பாடசாலைகளில் வெற்றிடமாக உள்ள இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் 1 அதிபர் பதவி வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பான விசேட அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. அரச சேவை ஆணைக்குழுவின் கல்விச் சேவைக் குழுவின் பணிப்புரைக்கு அமைவாக இலங்கைக் கல்விச் சேவையின் தரம் 1 உத்தியோகத்தர்களிடமிருந்து அந்தப் பாடசாலைகளில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள்...

ஆசிரியர்களின் வருமானத்திற்கு முட்டுக்கட்டை போட்ட கல்வி அமைச்சு..!

மேல்மாகாணத்தில் உள்ள ஆசிரியர்கள் தனியார் மேலதிக வகுப்புகளை நடத்துவதைக் கட்டுப்படுத்தி மாகாண கல்வி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. மேல் மாகாண கல்வி செயலாளர் நிசாந்தி ஜெயசிங்க இந்த  சுற்றறிக்கையை  வெளியிட்டுள்ளார். இதன்படி, மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர்கள் பாடசாலை நேரங்களில் மாணவர்களிடம் மேலதிக வகுப்புக்கான கட்டணத்தைப் பெற்றுக்கொண்டு தனியார் வகுப்புகளில் கற்பிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பாடசாலை நேரங்களுக்கு பின்னர் அல்லது வார இறுதி உள்ளிட்ட விடுமுறை நாட்களில் வெவ்வேறு...

கல்வி அமைச்சின் அதிரடி அறிவிப்பு..!

பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான மானியத் திட்டம் அஸ்வெசும நலன்களைப் பெறும் குடும்பங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படவில்லை என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அஸ்வெசும கொடுப்பனவு கிடைக்கபெறாத ஆனால் பொருளாதார ரீதியாக மிகவும் சிரமத்திற்கு உள்ளான பிள்ளைகளுக்கு உரிய கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அதன் செயலாளர் தெரிவித்துள்ளார். குறைந்த வருமானம் பெறும்...

கல்வி அமைச்சு விடுத்துள்ள பணிப்புரை..!

பாடசாலைகளில் புதிய தவணை ஆரம்பிக்க முன்னர் மாணவர்களுக்கு சீருடைகளை வழங்குமாறு பணிப்புரை விடுத்ததாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. வலயக் கல்வி அலுவலகங்களூடாக பாடசாலைகளுக்கு சீருடைகள் அனுப்பப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்தார். 2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலை சீருடைகளுக்கான முழுத் தொகை துணியையும் அன்பளிப்பாக வழங்க சீன மக்கள் குடியரசு முன்வந்துள்ளது.
- Advertisement -spot_img

Latest News

கஸ்ஸப தேரர் உட்பட 7 பேருக்கு விளக்கமறியல்

அனுராதபுரம் ருவன்வெலி சாய அருகில் நீதிமன்ற உத்தரவை மீறி சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த கஸ்ஸப தேரர் உட்பட 7 பேரை நவம்பர் 26 ஆம்...
- Advertisement -spot_img