Saturday, November 7, 2026
No menu items!

காசா

இஸ்ரேல், காசா மீது மீண்டும் போர் நடத்தும் – பெஞ்சமின் நெதன்யாகு!!

60 நாள் போர் நிறுத்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் இஸ்ரேல், காசா மீது மீண்டும் போர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நீண்ட நாட்களாகப் போர் இடம்பெற்று வருகிறது. இந்தநிலையில், ஹமாஸ் உடனான போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இஸ்ரேலின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும்...

உதவிக்காக காத்திருந்த மக்களும் இப்போது இலக்காகின்றனர்: காசா மீதான தாக்குதலில் உயிரிழப்புக்கள் தொடர்ந்து அதிகரிப்பு!

காசா மீதான இஸ்ரேல் தாக்குதல்களில், உதவிக்காக காத்திருந்த பலர் உயிரிழக்கின்றனர் என செய்திகள் வெளியாகியுள்ளன. தற்காலிக உதவி முகாம்கள் மற்றும் பாதுகாக்கப்பட்டதாகக் கூறப்படும் இடங்களில், அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தக்காரர்கள் நேரடி துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டு வீச்சுக்களில் ஈடுபடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காசா முழுவதும் இஸ்ரேலிய தாக்குதல்களில் இன்று மட்டுமே குறைந்தது 27 பேர்  உயிரிழந்துள்ளனர் என...

இஸ்ரேலின் தாக்குதலில் காசா இரத்தக் களரியாக மாறியது: 48 மணி நேரத்தில் 300 பேர் உயிரிழப்பு!

காசாவில் இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களால் நிலைமை மேலும் மோசமாகி வருகிறது. விடியற்காலையிலிருந்து இன்று காலை வரை நடைபெற்ற தாக்குதல்களில் 73 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், அவர்களில் குறைந்தது 33 பேர் மனிதாபிமான உதவி தேடுபவர்கள் எனவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். காசா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) நிர்வாகிக்கும் உதவி விநியோகப் பகுதிகளில் நடத்தப்பட்ட இஸ்ரேலின் "தூண்டப்படாத துப்பாக்கிச் சூடு"...

காசாவில் 60 நாள் போர்நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல்: ஹமாஸ் ஏற்க வேண்டும் என ட்ரம்ப் அறிவிப்பு!

காசாவில் 60 நாள் போர்நிறுத்தத்தை "இறுதி செய்வதற்குத் தேவையான நிபந்தனைகளுக்கு" இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறுயுள்ளார். மேலும் இந்த திட்டத்தை ஹமாஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். காசா முழுவதும் இஸ்ரேலியப் படைகள் 109 பாலஸ்தீனியர்களைக் கொன்றுள்ளன , இதில் 28 பேர் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆதரவு பெற்ற காசா மனிதாபிமான அறக்கட்டளை (GHF)...

இஸ்ரேலியப் படைகள் பள்ளி மீது நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது!

காசா நகரின் ஷேக் ரத்வான் பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் பள்ளியின் மீது இஸ்ரேலிய குண்டுவீச்சு நடத்தியதைத் தொடர்ந்து இறந்தவர்களின் எண்ணிக்கை 09 ஆக உயர்ந்துள்ளதாக அல்-ஷிஃபா மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ஈரானுடன் மோதலில் ஈடுபட்டிருந்தபோதும், முற்றுகையிடப்பட்ட பகுதியின் மீதான இஸ்ரேலிய தாக்குதல்கள் தினமும் தொடர்ந்தன என செய்திகள் வெளியாகியுள்ளன.

“தாகத்தால் இறக்கத் தொடங்குவார்கள்” – உலகம் பார்த்துக் கொண்டிருக்க, காசா குழந்தைகள் தாகத்தில் துடிக்கின்றனர்!

அக்டோபர் 2023 முதல் இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு உள்ளாகி வரும் முற்றுகையிடப்பட்ட காசா பகுதி, அதன் நீர் அமைப்புகளில் சரிவைக் கண்டு வருகிறது. காசா தற்போது மனிதனால் உருவாக்கப்பட்ட வறட்சியை எதிர்கொள்கிறது என்று ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியமான யுனிசெஃப் எச்சரித்துள்ளது. "குழந்தைகள் தாகத்தால் இறக்கத் தொடங்குவார்கள்" என்று முன்பே எச்சரிக்கை வழங்கப்பட்டிருந்த நிலையிலும் எவ்வித முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கவில்லை...

காசா போர் நிறுத்தம்: ஐ.நா. தீர்மானத்தில் இலங்கை ஆதரவு, இந்தியா நடுநிலை!

காசாவில் உடனடி மற்றும் நிரந்தர போர் நிறுத்தம் கோரி, நேற்று கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக இலங்கை வாக்களித்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபரிலிருந்து இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்புக்கும் இடையே, மோதல் நடந்து வருகிறது. காசாவில் இதுவரை, 55,000க்கும் மேற்பட்டோர் இந்த போரில், இறந்ததாக காசா சுகாதார அமைச்சு...

காசாவில் இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் 80 பேர் பலி..!

காசாவில் இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் 80க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே ஓராண்டுக்கு மேலாக மோதல் நீடித்த நிலையில், உலக நாடுகளின் தலையீட்டால் கடந்த ஜனவரியில் முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆறு வார கால போர் நிறுத்தத்தின் போது, இரு...

காசா மீது இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் 50 பேர் பலி!

காசா மீது இஸ்ரேல் நேற்று நள்ளிரவு முதல் நடத்திய தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர். காசாவின் தெற்கு நகரமான கான் யூனிஸில் உள்ள பாலஸ்தீனியர்களை வெளியேறுமாறு அறிவித்ததை அடுத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், காசா மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்தாவிட்டால், அதற்கு எதிராகத் தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கனடா, பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள்...

காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 40 பேர் பலி!

காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டதாக அந்த நாட்டு வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காசாவில் வெவ்வேறு பகுதிகளில் இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. தாக்குதலில் கொல்லப்பட்ட 40 பேரில், சுமார் 36 பேரின் சடலங்கள் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. <!-- -->
- Advertisement -spot_img

Latest News

தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை ஒன்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவிக்கிறது. இன்று (06) முதல் இந்த விசேட போக்குவரத்து...
- Advertisement -spot_img