Monday, June 8, 2026
No menu items!

கால அவகாசம்

பாடசாலை நேர நீடிப்பு தீர்மானம் – ரத்து செய்ய அரசாங்கத்திற்கு நவம்பர் 7 வரை அவகாசம் : ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க எச்சரிக்கை!

பாடசாலை நேரத்தை அரை மணிநேரம் அதிகரிக்கும் அரசாங்கத் தீர்மானத்தை ரத்து செய்ய, அரசாங்கத்திற்கு எதிர்வரும் நவம்பர் 7ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்படுவதாக ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டணி அறிவித்துள்ளது. இத்தீர்மானம் மாற்றப்படாத பட்சத்தில், டிசம்பர் முதல் வாரத்தில் நாடளாவிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அந்த கூட்டணி எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்...

அதிவேக நெடுஞ்சாலையில் ஆசனப்பட்டி அணிவது இன்று முதல் கட்டாயம்!

அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனைத்து வாகனங்களின் பயணிகளும் ஆசனப்பட்டி அணிவது இன்று (01) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறித்த தீர்மானத்திற்கு மாறாக செயல்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்தார். இருப்பினும், ஆசனப்பட்டி இல்லாத சில வாகனங்களுக்கு ஆசனப்பட்டியை பொருத்த மூன்று மாத கால அவகாசம்...

பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த விண்ணப்பங்களை மே 30 ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் திகதி இன்று அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் திகதி இன்று அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்தநிலையில், குறித்த தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை இன்று நண்பகல் 12 மணியுடன் முடிவடைய உள்ளது. ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால், அவற்றை முன்வைப்பதற்கு ஒன்றரை மணி நேரம் கால அவகாசம் வழங்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. வேட்புமனுக்கள் தாக்கல் முடிந்த...

சில பிரதேச சபைகளுக்கு கட்டுப்பணம் செலுத்த கால அவகாசம்..!

பூநகரி பிரதேச சபை, மன்னார் பிரதேச சபை மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபை ஆகியவற்றுக்கான தேர்தல் கட்டுப்பணத்தை செலுத்துவதற்குக் கடந்த 10 ஆம் திகதி முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் 24ஆம் திகதி முதல் 27ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை குறித்த மூன்று...

தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது; தொழில்முனைவோர் மன்றம்!

வரவு செலவுத் திட்டத்தின் மூலம் தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் முன்மொழிந்திருந்தாலும், அத்தகைய சம்பள அதிகரிப்புக்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று இலங்கையின் ஐக்கிய தொழில்முனைவோர் மன்றம் கூறுகிறது. அதன் தலைவர் டானியா எஸ். வணிகர்கள் தங்கள் திவாலான வணிகங்களை மீண்டும் உயிர்ப்பிக்க கால அவகாசம் தேவை என்று திருமதி அபேசுந்தரா கூறினார். "நாங்கள் உங்களிடம்...

அஸ்வெசும விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் நீடிப்பு!

அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க தனிநபர்களுக்கு கூடுதல் கால அவகாசம் வழங்க நலன்புரி நன்மைகள் சபை தீர்மானித்துள்ளது. இந்த சலுகை காலம் 2024 டிசம்பர் 2 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும். விண்ணப்பதாரர்கள் இந்த காலக்கெடுவிற்குள் தங்களின் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட பிரதேச செயலகத்தில் ஒப்படைக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தை பிரதேச செயலகத்திலேயே பெற்றுக்கொள்ளலாம் அல்லது நலன்புரிப்...

மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க மேலும் இரண்டு வார கால அவகாசம் ; இலங்கை மின்சார சபை!

மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பான முன்மொழிவுகளைச் சமர்ப்பிப்பதற்காக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இலங்கை மின்சார சபை மேலும் இரண்டு வார கால அவகாசம் கோரியுள்ளது. கடந்த 8ஆம் திகதி வரையில் மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பான முன்மொழிவுகளைச் சமர்ப்பிப்பதற்காக மின்சார சபைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கால அவகாசம் வழங்கியிருந்தது. மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பில் மேலும்...

G.C.E. O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மீளாய்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு!

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மீளாய்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடையவுள்ளது. கடந்த செப்டெம்பர் மாதம் 28 ஆம் திகதி வெளியான குறித்த பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வுக்கு உட்படுத்துவதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்குக் கடந்த 1 ஆம் திகதி முதல் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கான கால...

வருமான வரி செலுத்துவதற்கான கால அவகாசம் இன்றுடன்  நிறைவு!

2023 - 2024ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி செலுத்துவதற்கான கால அவகாசம் இன்றுடன் (30) நிறைவடையவுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்றைய திகதிக்குள் வரிகளை செலுத்த தவறும் நபர்களுக்கு எதிராக உள்நாட்டு இறைவரி சட்ட நியதிகளுக்கு அமைவாக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களிடமிருந்து வரிகளைப் பெற்றுக்...
- Advertisement -spot_img

Latest News

கணவரை கத்தியால் தாக்கி கொலை செய்த மனைவி கைது!

ஹொரனை காவல் பிரிவின் அரம்பகந்த பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து, தனது கணவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக தெரிவித்து பெண் ஒருவர் கைது...
- Advertisement -spot_img