Thursday, April 30, 2026
No menu items!

காவல்துறை உத்தியோகத்தர்கள்

போதைப்பொருள் வர்த்தகத்திற்கு எதிராக செயல்பட்ட காவல்துறை அதிகாரி மீது தாக்குதல்!

களுத்துறை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், எகொட உயன காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் தனது வீட்டில் இருந்தபோது ஆயுதமேந்திய குழுவினரால் தாக்கப்பட்டார். இந்த சம்பவம் நாகொட, வெனிவெல்கொட பகுதியில் உள்ள அவரது வீட்டில் நடந்துள்ளது. வாள்கள் மற்றும் தடிகளுடன் வந்த பத்து பேர் கொண்ட குழுவினர் அவரை தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் காயமடைந்த...

காவல்துறைக்கு 1,000 பெண் உத்தியோகத்தர்கள் நியமனம் – விரைவில் வர்த்தமானி அறிவிப்பு!

காவல்துறை சேவையில் 1,000 பெண் உத்தியோகத்தர்களை நியமிக்க முடிவு செய்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். மேலும் 5,000 காவல்துறை உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்காணல்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக அமைச்சர் தெரிவித்தார். காவல் துறையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்பும் நடவடிக்கையின்...

அக்ரஹார காப்பீட்டுத் திட்டத்தை பெற்றுக்கொள்ள போலி ரசீதுகள் சமர்ப்பிப்பு!

அக்ரஹார காப்பீட்டுத் திட்டத்தை பெற்றுக்கொள்வதற்காக காவல்துறை உத்தியோகத்தர்கள் போலி ரசீதுகளை சமர்ப்பித்துள்ளமை தெரியவந்துள்ளது. காவல்துறை உத்தியோகத்தர்கள் மூக்குக் கண்ணாடிகளை கொள்வனவு செய்வதற்கான செலவுகளைப் பெற்றுக்கொள்ள அக்ரஹார காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்துள்ளனர். எனினும் அவர்கள் போலியான ரசீதுகளையே வழங்கியுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. காவல்துறை மா அதிபருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில்...

மதுபோதையில் வாகனம் செலுத்திய உப காவல்துறை பரிசோதகர் கைது!

கடமை நேரத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்தி, விபத்தொன்றை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைதான கேகாலை தலைமையக காவல் நிலையத்தில் உப காவல்துறை பரிசோதகர் ஒருவர் எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கலிகமுவ, கொப்பேவல பகுதியில் ஏற்பட்ட குறித்த...

கையூட்டல் பெற்ற காவல்துறை உத்தியோகத்தர்-ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைது..!

20,000 ரூபாய் பணத்தை கையூட்டல் பெற்ற காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குருநாகல் - கிரிபாவ காவல்நிலையத்தில் பணியாற்றிய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தம்மை விட்டுப் பிரிந்து சென்ற மனைவிக்கு எதிராக கணவர் ஒருவரால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்தி, பின்னர் நீதிமன்றத்தின் ஊடாக நட்டஈடு பெற்று தருவதாக தெரிவித்து குறித்த காவல்துறை உத்தியோகத்தர் கையூட்டல் பெற்றுள்ளார். அதேநேரம், குறித்த பணத்தை செலுத்த தவறினால் வழக்கு தாக்கல் செய்து விளக்கமறியலில் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சந்தேக...

பேருந்துகளைச் சோதனையிடுவதற்கு சிவில் உடையில் உத்தியோகத்தர்கள்..!

நாடளாவிய ரீதியில் வாகன விபத்துக்களைக் குறைக்கும் வகையில் காவல்துறையால் விசேட போக்குவரத்து நடவடிக்கையொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறித் தொலைதூர பேருந்து சாரதிகள் கவனக்குறைவாக வாகனம் செலுத்தும் விடயம் தொடர்பில் பிரதானமாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. பயணிகள் பேருந்துகளைச் சோதனையிடுவதற்கு சிவில் உடையில் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளதாகவும், நீண்ட தூரச் சேவை பேருந்துகளில் அவர்கள் பயணிப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இதன்போது...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img