களுத்துறை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், எகொட உயன காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் தனது வீட்டில் இருந்தபோது ஆயுதமேந்திய குழுவினரால் தாக்கப்பட்டார்.
இந்த சம்பவம் நாகொட, வெனிவெல்கொட பகுதியில் உள்ள அவரது வீட்டில் நடந்துள்ளது. வாள்கள் மற்றும் தடிகளுடன் வந்த பத்து பேர் கொண்ட குழுவினர் அவரை தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலில் காயமடைந்த அந்த காவலர் தற்போது களுத்துறை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
பாதிக்கப்பட்ட காவலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக அந்தப் பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார். இதன் காரணமாகவே குறித்த குழுவினர் கோபமடைந்து இந்த தாக்குதலை மேற்கொண்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக காவல்துறை தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
மேலும் தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பாதுகாப்பு பிரிவுகளும், விசேட அதிரடிப்படையும் குறித்த பகுதியில் தற்போது கண்காணிப்பை கடுமையாக மேற்கொண்டு வருகின்றன.








