Wednesday, November 11, 2026
No menu items!

கைது

ஹரக் கட்டாவின் உதவியாளர் அதிரடியாக கைது..!

திட்டமிட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான ஹரக் கட்டாவின் உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மிதிகம நந்துன் சிந்தக விக்கிரமரத்ன எனப்படும் நபரே கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவரிடமிருந்து 48 T-56 துப்பாக்கிகளும் தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர் மிதிகம வெதகேவத்த பகுதியைச் சேர்ந்த 33 வயதானவர் எனத் தெரியவந்துள்ளது.

ஆயிரக்கணக்கான போதை மாத்திரைகளுடன் சிக்கிய இருவர்..!

சுதுமலையில் 1600 போதை மாத்திரைகளுடன் இருவரை மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, மானிப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயந்த குணதிலகவின் வழிகாட்டுதலில் சுதுமலை பகுதிக்கு விரைந்த பொலிஸார் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் இருவரை வழிமறித்து சோதனையிட்டுள்ளனர். இதன் போது இருவகையினை சேர்ந்த 1600...

முதியவர் வெட்டி கொலை – சந்தேக நபர் மடக்கி பிடிப்பு..!

கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் மாத்தளை பிரதேச குற்றவியல் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் நேற்று (01/03/2025) மாலை மஹாவெல பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தோடம்கஸ்லந்த பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. இந்த சந்தேக நபர் கடந்த பெப்ரவரி மாதம்...

வைத்தியசாலையில் குழந்தையை வீசிய மாணவியின் காதலனுக்கு விளக்கமறியல்..!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 18 வயது மாணவி ஒருவர் மலசலக்கூடத்தில் குழந்தையை பெற்று யன்னல் வழியாக வீசிய சம்பவம் தொடர்பாக மாணவியை கர்ப்பமாக்கிய அவரது 24 வயது காதலனை கைது செய்து நேற்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது அவரை எதிர்வரும் 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை...

இலத்திரனியல் சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது..!

நாட்டிற்கு சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட இலத்திரனியல் சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர்  டுபாயிலிருந்து நாடு திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (01/02/2025) கைது செய்யப்பட்டுள்ளார். ஜா-எல பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு – வெளியான பின்னணி..!

கடுவலை பிரதேசத்தில் பொலிஸ் உத்தரவை மீறி தப்பிச் செல்ல முயன்ற லொறி ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, நுரைச்சோலையில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு மரக்கறிகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்றை ஓட்டிச் சென்ற சாரதி, வத்தளையில் உள்ள தேநீர் கடைக்கு அருகில் லொறியை நிறுத்திவிட்டு தேநீர் அருந்துவதற்காக சென்றுள்ளார். இதன்போது சந்தேக நபரொருவர் குறித்த...

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க கோரி காத்திருப்பு போராட்டம்..!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், படகையும், உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி நேற்று (28/02/2025) காலை தொடங்கிய உண்ணாவிரத போராட்டத்தை மாலையுடன் முடித்துக் கொண்ட மீனவர்கள் நேற்று (28/02/2025) இரவிலிருந்து காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர். அரசு அதிகாரிகள் போராட்டத்தை கைவிடுமாறு மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் மீனவர்கள்...

மினுவாங்கொடை துப்பாக்கிச் சூடு – பெண் உள்ளிட்ட இருவர் கைது..!

மினுவாங்கொடை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளின் உரிமையாளரான பெண் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 26 ஆம் திகதி புதன்கிழமை கணேமுல்ல சஞ்சீவ கொலையை திட்டமிட்டதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள கெஹெல்பத்தர பத்மே என்பவரின் நெருங்கிய ஒருவர் மீதே  மினுவாங்கொடை பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. மினுவாங்கொடை - பத்தடுவன...

பல்வேறு பிரதேசங்களில் கைவரிசையைக் காட்டிய திருடன் கைது..!

பல்வேறு பிரதேசங்களில் உள்ள வீடுகளின் கதவுகளை உடைத்து பெறுமதியான பொருட்களைத் திருடியதாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை (27/02/2025) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்தின் தெற்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். மேல் மாகாணத்தின் தெற்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக...

சட்டவிரோத வெளிநாட்டு சிகரட்டுகளுடன் வர்த்தகர் கைது..!

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 30 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று வியாழக்கிழமை (27/02/2025) காலை கைது செய்யப்பட்டுள்ளார். பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய வர்த்தகரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான வர்த்தகர் பஹ்ரைனிலிருந்து இன்றைய தினம் காலை...
- Advertisement -spot_img

Latest News

ஐஸ் மற்றும் குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

உனவட்டுன பகுதியில் நேற்று (10) இரவு நடத்தப்பட்ட பொலிஸ் சோதனையில் 'ஐஸ்' மற்றும் 'குஷ்' போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காலி மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகள்...
- Advertisement -spot_img