Monday, November 9, 2026
No menu items!

கைது

பெருந்தொகையான ஹெரோயினுடன் இளைஞன் மடக்கிபிடிப்பு..!

யாழ் நகரில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். வண்ணார்பண்ணையைச் சேர்ந்த 27 வயதான இளைஞனே யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடம் இருந்து 60 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது. யாழில் நீண்டகாலத்தின் பின் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை ஹெரோயினாக இது கருதப்படுகிறது. சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸார் நடவடிக்கை...

தமிழக மீனவர்கள் 10 பேர் கைது – தொடரும் பிரச்சினை..!

எல்லை தாண்டிய ஒரு படகையும் அதிலிருந்த தமிழக 10 மீனவர்களையும் கடற்படையினர் காரைநகர் கடற்பரப்பில் வைத்து கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் மயிலிட்டி துறைமுகத்தில் வைத்து கடற்படையினரால் ஒப்படைக்கப்படவுள்ளனர். கைதானவர்கள் ஊர்காவல்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் உப பொலிஸ் பரிசோதகர் கைது..!

மாமனாரை தாக்கிய உப பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டதாக மொரந்துடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் கொழும்பில் உள்ள பிரதான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதல் சம்பவம் தொடர்பில் மாமனாரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்கள் இருவரும் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். நிலைய கட்டளைத் தளபதி பொலிஸ்...

மோட்டர் சைக்கிளில் கஞ்சா கடத்தல் – வசமாக சிக்கிய இருவர்..!

கிளிநொச்சியில் இருந்து வவுனியாவிற்கு மோட்டர் சைக்கிளில் கஞ்சா கடத்தியதாக பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா, ஓமந்தைப் பொலிசார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது கிளிநொச்சியில் இருந்து வவுனியாவிற்கு வருகைதந்த மோட்டர் சைக்கிள் ஒன்றில் இருந்து 700 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அதில் பயணித்த 36 வயதுடைய பெண்...

தவறவிட்ட தங்க ஆபரணத்தை ஒப்படைத்தவருக்கு நேர்ந்த கதி..!

யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் உணவு வாங்க வந்த கூலித் தொழிலாளி ஒருவர் நிலத்தில் விழுந்துகிடந்த தங்க ஆபரணத்தை எடுத்து வெதுப்பகத்தில் வழங்கிய நிலையில் இளைஞர் குழு அவரை கட்டிவைத்து தாக்கி வீடியோ காணொளி பதிவிட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நபர் கருத்து தெரிவிக்கையில், உரும்பிராய் பகுதியில் அமைந்துள்ள வெதுப்பகம்  ஒன்றுக்கு...

விசேட சுற்றிவளைப்பு – ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய இருவர்..!

மாதம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிஹிஜய செவன தொடர்மாடி  குடியிருப்புக்கு அருகில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05.01.2025) பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோதரை மற்றும் மாளிகாவத்தை பகுதிகளைச்  சேர்ந்த 31 மற்றும் 33 வயதுடையவர்களு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யபப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவரிடமிருந்து 15 கிராம் 300 மில்லிகிராம்...

மனுஷ நாணயக்காரவை கைதுசெய்ய நடவடிக்கை..!

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவை கைதுசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன. மனுஷ நாணயக்காரவின் சகோதரரான திசர இரோஷன நாணயக்கார நிதி மோசடி குற்றச்சாட்டில் கடந்த 28ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கைதுசெய்யப்பட்டிருந்தார். இவர் பின்லாந்தில் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொடுப்பதாகத் தெரிவித்து தனிநபர்களிடமிருந்து 3 பில்லியன் ரூபா வரையில் மோசடி செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு...

உள்நாட்டு துப்பாக்கிகளுடன் சிக்கிய இருவர்..!

கிரிபாவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இஹல மரதன்கடவல பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரு துப்பாக்கிகளை வைத்திருந்த இருவர் நேற்று (04.01.2025) கைது செய்யப்பட்டுள்ளனர். 34 மற்றும் 52 வயதுடைய பஹல கிரிபாவ பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைதானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிபாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, கொபெய்கனே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...

சட்டவிரோத பூச்சிக்கொல்லி இறக்குமதி – நால்வர் கைது..!

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட விவசாய பூச்சிக்கொல்லி மருந்து போத்தல்களுடன் சந்தேகநபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் வேலணை - துறையூர் பகுதியில் வைத்து பெருமளவான விவசாய பூச்சி கொல்லி மருந்து போத்தல்களுடன் சந்தேகநபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் பூச்சி கொல்லி மருந்து போத்தல்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு...

நூற்றுக்கணக்கான போதை மாத்திரைகளுடன் சிக்கிய இளைஞன்..!

இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், முருங்கன் பொலிஸாரினால் ஒரு தொகுதி போதை மாத்திரைகளுடன் சிலாபத்துறை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்றைய தினம் சனிக்கிழமை (04.01.2025) முருங்கன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 200 போதை வில்லைகள் அடங்கிய பொதி மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் போதை மாத்திரைகளுடன் முருங்கன்...
- Advertisement -spot_img

Latest News

பார்வையாளர்களுக்கு நன்றி தெரிவித்து வீதியை கடந்த யானைகள்

கும்புக்கன் ஓயா அருகே வெல்லவாய - மொனராகலை பிரதான வீதியை கடக்கும் முன் பார்வையாளர்களை பார்த்து வணக்கம் அல்லது நன்றி செலுத்துவது போல் காட்சியளித்த காட்டு...
- Advertisement -spot_img