Sunday, November 8, 2026
No menu items!

கைது

தங்க தாமரை என்று கூறி ஒரு பூவை விற்பனை செய்ய தயாரான நபர் கைது!

தொல்பொருள் மதிப்பு மிக்க தங்க தாமரை என்று கூறி ஒரு பூவை விற்பனை செய்ய தயாரான நபர் ஒருவரை மாத்தளை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நேற்று (01) கைது செய்துள்ளனர். மாத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலுவிஹார பிரதேசத்தில் மாத்தளை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த...

பணம் கோரி முன்னாள் இராணுவ சிப்பாயின் மனைவியைத் தாக்கிய இராணுவ சிப்பாய்!

பணம் கோரி முன்னாள் இராணுவ சிப்பாயின் மனைவியைத் தாக்கியதாகக் கூறப்படும்  இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவத்தகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெஹியத்தகண்டிய இராணுவ முகாமில் கடமையாற்றும் 37 வயதுடைய இராணுவ சிப்பாயொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்குள்ளானவர், உயிரிழந்த முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரின் மனைவி என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவத்தகம...

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கை!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 719  சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில்  699 ஆண்களும்  20 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் 26 பேர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன்,  02 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்படும் ஜீவன் தொண்டமான்…!

களனிவெலி பெருந்தோட்டத்திற்குட்பட்ட பீட்ரு தேயிலைத் தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பில் தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகாத அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் ஏனையவர்களைக் கைதுசெய்து அடுத்த மாதம் 26ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். களனிவெளி பெருந்தோட்டத்திற்குட்பட்ட பீட்ரு தேயிலைத் தொழிற்சாலைக்குள் மே மாதம் 30 ஆம் திகதி அத்துமீறி...

தேசிய பாதுகாப்பு கற்கை நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் அசங்க அபேகுணசேகர கைது…!!

தேசிய பாதுகாப்பு கற்கை நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் அசங்க அபேகுணசேகர கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உள்நாட்டு இறைவரி திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் அவருக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது…!!

பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட 20 விசேட குழுக்களால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பாதாள உலக கும்பலைச் சேர்ந்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதாள உலக கும்பலுடன் தொடர்புகளை பேணியதாக சந்தேகிக்கப்படும் மேலும் 29 பேர் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலி பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரின்...

மாத்தளையில் விபத்து; இளைஞர் பலி…!!

மாத்தளை, தம்புள்ளை - பக்கமுன வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பக்கமுனவிலிருந்து தம்புள்ளை நோக்கிப் பயணித்த கார் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிள் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்...

இலங்கை அரசை கண்டித்து   மீனவர்கள் ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்!

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்க அனுமதி பெற்று தர நடவடிக்கை எடுக்க கோரியும் 5 மாவட்ட மீனவர்கள்  ராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரே  இன்று வெள்ளிக்கிழமை(19) காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் 1000க்கும்  மேற்பட்ட மீனவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்,நாடாளுமன்ற உறுப்பினர்கள்...

யாழ்ப்பாணத்தில் சுகாதார அமைச்சர் பங்கேற்ற கலந்துரையாடலில் குழப்பம் விளைவித்த நபர் கைது!

யாழ்ப்பாணத்தில் சுகாதார அமைச்சர் பங்கேற்ற கலந்துரையாடலில் குழப்பம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். குறித்த நபர் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் நேற்று முற்படுத்தப்பட்டபோது 75000 ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார். எதிர்வரும் 21 ம் திகதி குறித்த நபரை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜராகுமாறு நீதவானால் உத்தரவிடப்பட்டது. வடக்கு மாகாணத்தின் சுகாதார மேம்பாடுகள்...

பல்கலைக்கழக அலுவலகரின் மோசடி..!

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அலுவலர் ஒருவர் வெளிநாட்டு ஆசைகாட்டி 47 லட்சம் ரூபா மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி அலுவலர் யாழ்ப்பாணம் மாவட்ட விசேட  குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி குணறோயன் தலைமையிலான குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கமைய வெளிநாட்டுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து மோசடியில் ஈடுபட்ட இளம் பெண்ணொருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், அந்த யுவதியை...
- Advertisement -spot_img

Latest News

 மக்கள் கலந்துரையாடல் இன்றி சில சட்டங்கள் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுத்தல் சட்டமூலம் ஆகியவற்றை முதலில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தாது பாராளுமன்றத்தில்...
- Advertisement -spot_img