யாழ்ப்பாணத்தில் சுகாதார அமைச்சர் பங்கேற்ற கலந்துரையாடலில் குழப்பம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

குறித்த நபர் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் நேற்று முற்படுத்தப்பட்டபோது 75000 ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

எதிர்வரும் 21 ம் திகதி குறித்த நபரை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜராகுமாறு நீதவானால் உத்தரவிடப்பட்டது.

வடக்கு மாகாணத்தின் சுகாதார மேம்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண சபை கேட்போர் கூடத்தில் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தலைமையில் நடைபெற்றபோது குழப்பத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் சாவகச்சேரி பொலிஸாரால் குறித்த நபர் நேற்று கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here