மாத்தளை, தம்புள்ளை – பக்கமுன வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பக்கமுனவிலிருந்து தம்புள்ளை நோக்கிப் பயணித்த கார் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிள் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் தம்புள்ளை பகுதியில் வசிக்கும் 29 வயதுடைய இளைஞர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து கார் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தம்புள்ளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here