Wednesday, September 30, 2026
No menu items!

கொட்டாஞ்சேனை

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு: குற்றத்துக்கு உதவியதாக 32 வயது பெண் கைது!

கொட்டாஞ்சேனை பகுதியில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில், குற்றத்துக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் மேலும் ஒரு பெண் கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகளில், வெளிநாட்டில் வசிக்கும் ஒரு பாதாள உலகக் குற்றவாளியுடன் இந்த பெண் தொடர்பில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டை எளிதாக்கும் வகையில் குற்றவாளிகளுக்கு அவர் வாகனம் ஒன்றை வழங்கியதோடு,...

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்..!!

கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில் நேற்று (07) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர், குற்றவியல் குழு உறுப்பினர் பாலச்சந்திரன் புஷ்பராஜ் என்ற 'பூகுடு கண்ணா' என்பவரின் சகா என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கொட்டாஞ்சேனை 16 ஆவது ஒழுங்கையில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். கார் ஒன்றில் வந்த நபர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகப்...

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம் – அதிபர் உடனடி இடமாற்றம்..!

கொட்டாஞ்சேனையில் தன்னுயிர் மாய்த்த பாடசாலை மாணவி தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில், அந்த மாணவி முன்னர் கல்விகற்ற பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் அதிபர் கல்வியமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளார். பதில் அதிபராக கடமையாற்ற, கல்வியமைச்சின் உத்தியோகத்தர் ஒருவர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார். மேற்படி மாணவி விடயத்தில் மேற்படி பாடசாலை நிர்வாகம் அசமந்தப் போக்கில் நடந்துகொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இந்த...

கொட்டாஞ்சேனை மாணவியின் சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவு!

கொட்டாஞ்சேனை பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பில், சந்தேகநபரான பாடசாலை ஆசிரியர் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்தை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் காவல்துறைக்கு இன்று (19) உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை எதிர்வரும் ஜூன் மாதம் 23ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாடு தொடர்பில் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த...

கொட்டஹேன துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் சந்தேக நபர்கள் கைது..!

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவின் சுமித்ராராம வீதிப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒரு ஆணும் பெண்ணும் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் குற்றத்திற்குப் பிறகு தப்பிச் சென்ற ஒரு சந்தேக நபரும், குற்றத்திற்கு உதவிய ஒரு சந்தேக நபரும் நேற்று (17) கொட்டாஞ்சேனை காவல் நிலையத்திலும், கொழும்பு...

கொட்டாஞ்சேனை மாணவியின் மரணம்; விசாரணைக்கு அழைத்தும் வராத ஆசிரியர்!

கொழும்பு - கொட்டாஞ்சேனையில் சிறுமி ஒருவர் உயிர்மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பான விசாரணையின் இன்றைய அறிக்கையை வழங்குமாறு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, காவல்துறை மற்றும் கல்விசார் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. பம்பலபிட்டி மற்றும் கொட்டாஞ்சேனை காவல் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் மற்றும் குறித்த மாணவி கல்விகற்ற பாடசாலை அமைந்துள்ள கல்வி வலய அதிகாரிகளிடம் இந்த அறிக்கைகள் கோரப்பட்டிருப்பதாக...

கொட்டாஞ்சேனை மாணவி ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானமை உறுதி!

உயிரை மாய்த்துக் கொண்ட கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, பம்பலப்பிட்டியில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்று வந்த காலப்பகுதியில் அந்த பாடசாலையின் ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேகநபரான ஆசிரியர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொட்டாஞ்சேனை கல்பொத்த...

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம் – அறிக்கை வெளியிட்ட சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

கொட்டாஞ்சேனையில் மாணவி ஒருவர் தமது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சட்டத்துக்கு அமைய, கொட்டாஞ்சேனை மற்றும் பம்பலப்பிட்டி காவல்துறையினரிடம் இருந்து இந்த விடயம் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளது. பாடசாலைக்குள்...

கொட்டாஞ்சேனை சிறுமியின் மரணம் தொடர்பில் பிரதமர் வெளியிட்டுள்ள கருத்து!

கொட்டாஞ்சேனை சிறுமியின் மரணம் போன்றதொரு சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்காக பொறிமுறையொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. குறித்த சிறுமியின் விடயத்தில் முதலாவது சம்பவம் இடம்பெற்ற உடனேயே அது தொடர்பில் உரிய முறையில் தகவல் பதிவாகவில்லை என்பது தற்போது தெளிவாகியுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றில் தெரிவித்தார். அதேநேரம் எதற்காக இந்த விடயம் சரியான முறையில் பதிவாகவில்லை...

கொட்டாஞ்சேனை பகுதியில் பாடசாலை மாணவி உயிர்மாய்ப்பு சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியருக்கு இடமாற்றம்!

கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் (15) தமது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ள கல்வி அமைச்சு, குறித்த மாணவி கல்வி பயின்ற பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள பாடசாலையின் அதிபரிடம் விசாரணைகள் இடம்பெறுவதாக குறிப்பிட்டுள்ளது. தற்போது...
- Advertisement -spot_img

Latest News

இந்த ஆண்டில் இதுவரையில் 891 துப்பாக்கிகள் மீட்பு

2026 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரை 891 சட்டவிரோத துப்பாக்கிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ...
- Advertisement -spot_img