Saturday, June 13, 2026
No menu items!

கொள்கலன்

கொள்கலன் நெரிசல் தொடர்பில் ஆராய புதிய குழு..!

இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை அகற்றுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் போக்குவரத்தை நிறுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து ஆராய நிதி அமைச்சு குழுவொன்றை நியமித்துள்ளது. துறைமுகத்தில் தேங்கியுள்ள கொள்கலன்கள் அகற்றப்படாமை திட்டமிட்ட செயலா என்பதை ஆராய இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட 323 கொள்கலன்களை சுங்க சோதனைக்கு உட்படுத்தாமல் அனுமதித்தமை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைக்குரிய...

கொள்கலன்  பிரச்சினைக்கான தீர்வு!

துறைமுகத்தில் நிலவும் கொள்கலன் நெரிசல் பெப்ரவரி மூன்றாம் வாரத்திற்குள் முழுமையாக தீர்க்கப்படும் என இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது. பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க மற்றும் ஏனைய அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்திர புத்தாண்டு விடுமுறை காரணமாக சீனாவில் இருந்து கொள்கலன் இறக்குமதியை...

சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட கொள்கலன்கள்..!

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட இரண்டு கொள்கலன்களிலிருந்து 20 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான பொருட்கள் சுங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.  பொறுப்பேற்கப்பட்ட பொருட்களில் வாசனைத் திரவியங்கள், பாதணிகள், சொக்லட் உள்ளிட்ட பல பொருட்கள் அடங்கியுள்ளன. டுபாய் மற்றும் மலேசிய ஆகிய நாடுகளிலிருந்து குறித்த கொள்கலன்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.  நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள முகவரிகளுக்குக் குறித்த பொருட்கள் அனுப்பி...

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் தேக்கம் அதிகரிப்பு..!

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் நெரிசல் தீர்க்கப்படும் என்று சுங்க அதிகாரிகள் கூறிய போதிலும், கொள்கலன்கள் இன்னும் துறைமுகத்தில் தேங்கி நிற்பதாக கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுடன் ஒப்பிடும்போது,  ​​துறைமுகத்தில்  தேங்கியுள்ள கொள்கலன்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள தெரிவித்துள்ளார். குறித்த கொள்கலன்களை உடனடியாக விடுவிப்பதற்கு அதிகாரிகள் பணியில்...

கொள்கலன்களில் சட்டவிரோத பொருட்கள் ;அரசாங்கம் பொறுப்பு!

சுங்க தரப்பினரின் சோதனை இன்றி விடுவிக்கப்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட 323 கொள்கலன்களில் போதைப்பொருள் அல்லது சட்டவிரோத பொருட்கள் அடங்கியிருந்தால் அதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்கும் என பிரதியமைச்சர் ஜனித் ருவன் கொடிதுவக்கு தெரிவித்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபையின் ஹோமாகமை பேருந்து சாலைக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டதன் பின்னர், ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர்...

மக்கள் எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துக்காட்டிய சஜித்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாட்டின் பல்வேறு துறைகளில் உள்ள தனிநபர்கள் எதிர்கொள்ளும் பல சவால்களை எடுத்துக்காட்டி, இந்த அழுத்தமான பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை கோரினார். 33% மின்சாரக் கட்டணக் குறைப்பு வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் மின்சார கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காக குறைப்பதாக அரசாங்கம் உறுதியளித்த போதிலும், மின்சார கட்டணத்தை அதிகரிப்பது தவிர்க்க முடியாதது என பொறுப்பு...

தேங்கியுள்ள கொள்கலன் தாங்கிப் பாரவூர்திகள்!

1,100 கொள்கலன் தாங்கிப் பாரவூர்திகள் துறைமுகம் மற்றும் சுங்கத்தில் தேங்கியுள்ளதாக அகில இலங்கை கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அகில இலங்கை கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள இதனைத் தெரிவித்துள்ளார். இதுதவிர, சீ.ஐ.சீ.டீ தளத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுடன் 400 கொள்கலன் தாங்கிகள் தேங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கொள்கலன்...

பாலஸ்தீனியர்களின் சடலங்கள் அடங்கிய கொள்கலன்களை அனுப்பிய காசா!

அடையாளம் காண முடியாத நிலையில் பாலஸ்தீனியர்களின் சடலங்கள் அடங்கிய கொள்கலன்களை அனுப்பியுள்ளதாக இஸ்ரேல் மீது காசா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. இதன்படி, இஸ்ரேலிலிருந்து அனுப்பப்பட்ட 88 பாலஸ்தீனியர்களின் சடலங்களின் அடையாளங்களை உறுதிப்படுத்தும் வகையிலான தகவல்கள் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது. இதன் காரணமாகக் குறித்த சடலங்களைப் பெறுவதற்கு காசாவின் சுகாதார அமைச்சு மறுத்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலின் இந்த...

சுங்க அதிகாரிகளின் பணிப்புறக்கணிப்பால் ஏற்பட்ட விபரீதம்…!!

சுங்க அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பு காரணமாக குவிந்துள்ள 5000க்கும் அதிகமான கொள்கலன்களை விடுவிக்க வார இறுதியில் துரித வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். தேர்தல் நெருங்கும் போது தொழிற்சங்க நடவடிக்கைகள் இடம்பெறுவது எதிர்பார்க்கப்படக்கூடிய ஒரு சூழ்நிலை எனவும், பெரும்பான்மையான தொழிற்சங்கங்கள் அரசியல் இயக்கத்துடன் இணைந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img