துறைமுகத்தில் நிலவும் கொள்கலன் நெரிசல் பெப்ரவரி மூன்றாம் வாரத்திற்குள் முழுமையாக தீர்க்கப்படும் என இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க மற்றும் ஏனைய அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்திர புத்தாண்டு விடுமுறை காரணமாக சீனாவில் இருந்து கொள்கலன் இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்துவது வரும் வாரங்களில் நெரிசலை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.






