Sunday, May 3, 2026
No menu items!

சிறைச்சாலை அதிகாரிகள்

சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி தப்பிச் செல்ல முயன்ற போது நீரில் மூழ்கி உயிரிழப்பு!

கண்டி மாவட்டத்தில் உள்ள பல்லேகெலே திறந்தவெளி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் மாகாவலி கங்கையில் குதித்து தப்பிச் செல்ல முயன்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அரகம கும்புக்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய கைதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவத்தன்று, இந்த கைதி சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பிலிருந்து தப்பிச் செல்வதற்காக மாகாவலி...

மாத்தறை சிறைக் கைதிகளை இடமாற்ற நடவடிக்கை..!

மாத்தறை சிறைச்சாலையில் நேற்று (22/04/2025) இரவு ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக, அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை இன்று (23/04/2025) காலை அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாத்தறை சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகளை அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று இரவு 8.00 மணியளவில் மாத்தறை சிறைச்சாலையில் உள்ள சில கைதிகள் சிறைச்சாலைக்குள்...

மெகசின் சிறைச்சாலை கைதியின் மரணம் குறித்து விசாரணைகள் ஆரம்பம்..!

சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் சக கைதிகளால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் கொழும்பு மெகசின் சிறைச்சாலை கைதியின் மரணம் தொடர்பாக பொரளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் மஹரகம பொலிஸாரால் கைதான சந்தேகநபர் கடந்த மாதம் 23 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டார். கொழும்பு மெகசின் சிறைச்சாலையின் இரு அதிகாரிகள், போதைப்பொருள் வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் அந்த நபரை...

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பில் 40 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு!

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக மேலும் பலரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக அன்றைய தினம் நீதிமன்ற வளாகத்தில் பணியிலிருந்த காவல்துறையினர், காவல்துறை விசேட அதிரடிப் படையினர் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட சுமார் 40 பேரிடம் இதுவரை வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 10 சந்தேக...

மட்டக்களப்பு சிறையிலிருந்து 12 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு..!

நத்தார் பண்டிகையை முன்னிட்டு இன்று (25.12.2024) திகதி மட்டக்களப்பு சிறையிலிருந்து 12 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. சிறிய குற்றங்களுக்காகவும், வேறு காரணங்களுக்காகவும் தண்டனை பெற்றவர்களுக்கு நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதியினால் வழங்கப்படுகின்ற பொது மன்னிப்பின் அடிப்படையில் குறித்த பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 12 ஆண் கைதிகளுக்கு...

தப்பி ஓடிய சந்தேக நபர் –  வலை வீசி தேடும் பொலிஸார்..!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த நிலையில் தப்பி ஓடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன் போது தப்பி சென்ற சந்தேக நபரை பொலிஸார் உட்பட சிறைச்சாலை அதிகாரிகள் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் நேற்று (20.12.2024) இடம்பெற்றுள்ளது. 28 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரே மட்டக்களப்பு...

சிறைச்சாலையிலிருந்து கைதி தப்பியோட்டம்!

காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (13) இடம்பெற்றுள்ளது. காலி, அக்மீமன பிரதேசத்தைச் சேர்ந்த கைதி ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார். இந்த கைதி சிறைச்சாலையின் சமையல் அறையில் உணவுகளைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பிலிருந்து...

சிறைச்சாலையிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ள மூன்று கையடக்கத் தொலைபேசிகள்!

அகுனகொலபலஸ்ஸ சிறைச்சாலையின் அறையொன்றின் சுவரிலிருந்து மூன்று கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சிம் அட்டை ஒன்றை சிறைச்சாலை அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர். சோதனையின் போது, இந்த கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சிம் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், கண்டுபிடிக்கப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் சிறிய அளவிலானவை எனவும் சிறைச்சாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த மூன்று கைத்தொலைபேசிகளும் யாருடையதென தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  
- Advertisement -spot_img

Latest News

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை அதிகரிப்பு ?

சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி அதிகரிப்பு (SSCL) மற்றும் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை நாணயத்தின் மதிப்பு தொடர்ச்சியாக குறைந்தமை காரணமாக, இலங்கையில் இறக்குமதி செய்யப்படும்...
- Advertisement -spot_img