காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (13) இடம்பெற்றுள்ளது.

காலி, அக்மீமன பிரதேசத்தைச் சேர்ந்த கைதி ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.

இந்த கைதி சிறைச்சாலையின் சமையல் அறையில் உணவுகளைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here