Sunday, June 7, 2026
No menu items!

சிறைச்சாலை

சிறையின் அறைகளுக்குப் பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த தொலைபேசிகள் மீட்பு…!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களான "கனேமுல்ல சஞ்சீவ" மற்றும் "வெலே சுதா" ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறையின் அறைகளுக்குப் பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த தொலைபேசி மற்றும் பல தொலைபேசி பாகங்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புஸ்ஸ சிறைச்சாலை முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்று (13.10) புஸ்ஸ உயர்பாதுகாப்பு...

சிறைச்சாலை அதிகாரிகள் பணியிலிருந்து நீக்கம்!

அகுங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையிலிருந்து உரிய அனுமதியின்றி வெளியே அழைத்துச் செல்லப்பட்ட கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் மூன்று சிறைச்சாலை அதிகாரிகள் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 10 கைதிகள், கடந்த முதலாம் திகதி சிறைச்சாலை அதிகாரி ஒருவரின் மேற்பார்வையின் கீழ் சிறைச்சாலையின் வெளிப்புறப் பகுதியைச் சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதன்போது அவர்களில் 4 கைதிகள் தப்பியோடியதாக...

போதைப்பொருள் கலந்த உணவுடன் சிறையிலுள்ள கணவனை பார்க்க சென்ற மனைவி…!

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கணவனுக்கு மிகவும் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கலந்த உணவை கொண்டு சென்ற பெண்ணொருவர் சிறைச்சாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். அநுராதபுரம், சுச்சாரித்தாகம பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, போதைப்பொருள் குற்றம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது கணவரைப் பார்ப்பதற்காக பெண்ணொருவர்  அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்றுள்ளார். இதன்போது,...

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தேரர் உயிரிழப்பு…!

பாலியல் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தேரர் ஒருவர் திடீரென சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 25 ஆம் திகதி உயிரிழந்துள்ளதாக அம்பாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர். வீரவில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெஹெரபெலெஸ்ஸ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பணிபுரிந்த  65 வயதுடைய தேரர் ஒருவரே உயிரிழந்துள்ளார். இந்த தேரர் ...

கைதிகள் தினத்தை முன்னிட்டு விடுதலை செய்யப்படவுள்ள கைதிகள்!

கைதிகள் தினத்தை முன்னிட்டு பொது மன்னிப்பில் 350 சிறைக்கைதிகள் விடுவிக்கப்படவுள்ளனர். ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் காமினி பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதன்படி நாளை (12) , சிறு குற்றங்களுக்குத் தண்டனை அனுபவித்து வரும் 350 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக எண்ணிக்கையில் அடைக்கப்படும் சிறைக்கைதிகள் : சற்குணநாதன் அம்பிகா விசனம்…!!!

இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் இயலுமையை மீறி பெரும் எண்ணிக்கையான சிறைக்கைதிகள் அடைக்கப்படுதல் என்பது வழமையாக இடம்பெற்றுவருவதாகவும், 2018 இல் 93 சதவீதமாகக் காணப்பட்ட இவ்வீதம் 2024 இல் 201 சதவீதமாக அதிகரித்திருப்பதாகவும் சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கான ஐக்கிய நாடுகள் நிதியத்தின் உறுப்பினரும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளருமான அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக கடந்த 2018ஆம் ஆண்டு...

சிறைச்சாலை தினத்தை முன்னிட்டு கைதிகளுக்கு விசேட சலுகை..!

119வது சிறைச்சாலை தினத்தை முன்னிட்டு இன்று (16) சிறைக்கைதிகளை திறந்த வெளியில் பார்வையிடும் விசேட சந்தர்ப்பமொன்றை வழங்குவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதற்கமைவாக இன்று (16) கைதிகளின் உறவினர்களால் கொண்டுவரப்படும் ஒரு கைதிக்கு போதுமான உணவு மற்றும் சுகாதார பொருட்களை வழங்குவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி.திஸாநாயக்க குறிப்பிட்டார். இன்று காலை 9...

மட்டு சிறைச்சாலையில் ஜஸ்போதை பொருளுடன் உத்தியோகத்தர் ஒருவர் கைது!

மட்டக்களப்பு சிறைச்சாலையில் 8 கிராம் ஜஸ்போதை பொருளுடன் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர்  நேற்று இரவு கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த சிறைச்சாலையில் இரவு கடமையில் இருந்த சிறைச்சாலை உத்தியோகத்தரை ஜெயிலர் சோதனையிட்ட போது அவரிடமிருந்து 8 கிராம் ஜஸ்போதை பொருளை மீட்டதுடன் அவரை கைது செய்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர். இதில் கைது செய்யப்பட்டவர்...

ரஸ்ய எதிர்க்கட்சி தலைவர் திடீர் மரணம்

விளாடிமிர் புட்டினை கடுமையாக விமர்சித்துவந்த  ரஸ்ய எதிர்கட்சி தலைர் அலெக்சே நவல்னி நேற்றைய தினம் சிறைச்சாலையில் உயிரிழந்துள்ளதாக  சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் 47 வயதுடையவர் எனவும்  திடீர் என உடல்நலம் பாதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் சுயநினைவிழந்தார் எனவும் ரஸ்ய சிறைச்சாலை வட்டாரங்கள்  தெரிவித்துள்ளன. ஆர்ட்டிக்கில் உள்ள சிறைச்சாலையிலலே   இவ்வாறு  உயிரிழந்துள்ளார். அத்துடன் அவரை காப்பாற்றுவதற்கான முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை...
- Advertisement -spot_img

Latest News

கணவரை கத்தியால் தாக்கி கொலை செய்த மனைவி கைது!

ஹொரனை காவல் பிரிவின் அரம்பகந்த பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து, தனது கணவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக தெரிவித்து பெண் ஒருவர் கைது...
- Advertisement -spot_img