Sunday, June 7, 2026
No menu items!

சிறைச்சாலை

வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட துமிந்த சில்வா!

கடந்த வாரம் திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள பொது அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். நேற்றைய தினம் சிறைச்சாலை வைத்தியசாலையில் விசேட வைத்தியர் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையைத் தொடர்ந்து துமிந்த சில்வாவை மீண்டும் சிறைச்சாலைக்கு மாற்றுமாறு...

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு கைதிகளை பார்வையிட அனுமதி!

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறைச்சாலைகளில் உள்ள இந்துமத கைதிகளை பார்வையிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலைகள் திணைக்களம் அறிக்கை ஒன்றின் ஊடாக இதனைக் தெரிவித்துள்ளது. அதன்படி நாளையதினம், சிறைச்சாலைகளில் உள்ள இந்துமத கைதிகளை பார்வையிட வரும் உறவினர்களால் கைதியொருவருக்கு தேவையான அளவு, உணவுப் பொருட்கள் மற்றும் இனிப்புகளை எடுத்து வர முடியும் என சிறைச்சாலைகள்...

ஹெரோயின் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் இளைஞனுக்கு ஆயுள் தண்டனை!

சிறைச்சாலைக்குள் 25 கிராமுக்கு அதிகமான ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய குற்றச்சாட்டின் பேரில் 26 வயதுடைய இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆயுள் தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் மஞ்சுள திலகரத்ன இன்று பிறப்பித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தனது நண்பருக்காக எடுத்துச் சென்ற உணவுப் பாத்திரத்தில் ஹெரோயினை மறைத்து வைத்திருந்தார். எவ்வாறாயினும்,...

சட்டத்தின் முன் அனைவரும் சமம் – சாதாரண கைதிகளின் அறையில் ஞானசார தேரர்..!

இஸ்லாம் மதத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் வெலிக்கடை சிறைச்சாலையின் சாதாரண கைதிகள் தடுத்து வைக்கப்படும் அறையில் சிறைவைக்கப்பட்டுள்ளார். இதன்படி, பதிவு செயல்முறைக்குப் பின்னர், ஞானசார தேரர் சிறையில் அணிய வேண்டிய ஆடையை பரிந்துரைப்பதில் சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டம் பின்பற்றப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம்...

வவுனியா சிறைச்சாலையில் பொதுமன்னிப்பின் கீழ் 8 கைதிகள் விடுதலை..!

நத்தார் பண்டிகையை முன்னிட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து 8 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இன்று நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் சிறு குற்றங்களுக்காக தண்டனை பெற்றிருந்த 389 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்திருந்தது. அந்தவகையில் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் சிறுகுற்றங்களுக்காக தடுத்துவைக்கப்பட்டிருந்த...

தப்பி ஓடிய சந்தேக நபர் –  வலை வீசி தேடும் பொலிஸார்..!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த நிலையில் தப்பி ஓடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன் போது தப்பி சென்ற சந்தேக நபரை பொலிஸார் உட்பட சிறைச்சாலை அதிகாரிகள் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் நேற்று (20.12.2024) இடம்பெற்றுள்ளது. 28 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரே மட்டக்களப்பு...

கைதிக்கு சூட்சுமமான முறையில் கைவிலங்கு சாவி கொடுக்க முன்றவர் கைது..!

புதிய மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு மிகவும் சூட்சுமமான முறையில் கைவிலங்கு சாவியை கொண்டு சென்றதாக கூறப்படும் சந்தேக நபரொருவர் சிறைச்சாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சந்தேக நபர் புதிய மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவரை சந்திப்பதற்கு சென்ற போது சிறைச்சாலை...

பூஸா சிறைச்சாலையிலிருந்து கையடக்கத் தொலைபேசி உட்பட பல்வேறு பொருட்கள் மீட்பு..!

பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல் காரருமான “பொடி லெசி” என அழைக்கப்படும் ஜனித் மதுஷங்கவின் அறையிலிருந்து கையடக்கத் தொலைபேசி உட்பட பல்வேறு பொருட்கள் நேற்று (08.12.2024) கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் பூஸா சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட...

புஸ்ஸ சிறைச்சாலை வளாகத்தில் ஏராளமான கையடக்க தொலைபேசி உபகரணங்கள் மீட்பு..!

புஸ்ஸ சிறைச்சாலை வைத்தியசாலை வளாகத்திலும் சிறைச்சாலை வளாகத்திலும் ஏராளமான கையடக்க தொலைபேசி உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பொலிஸ் விசேட அதிரடிப்படை, புஸ்ஸ உயர்பாதுகாப்பு சிறைச்சாலை முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சிறைச்சாலை வைத்தியசாலை மைதானத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த உபகரணத் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறைச்சாலை வைத்தியசாலை மற்றும் சிறைச்சாலையில் 5 கையடக்கத் தொலைபேசி...

சிறைச்சாலையிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ள மூன்று கையடக்கத் தொலைபேசிகள்!

அகுனகொலபலஸ்ஸ சிறைச்சாலையின் அறையொன்றின் சுவரிலிருந்து மூன்று கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சிம் அட்டை ஒன்றை சிறைச்சாலை அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர். சோதனையின் போது, இந்த கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சிம் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், கண்டுபிடிக்கப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் சிறிய அளவிலானவை எனவும் சிறைச்சாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த மூன்று கைத்தொலைபேசிகளும் யாருடையதென தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  
- Advertisement -spot_img

Latest News

கணவரை கத்தியால் தாக்கி கொலை செய்த மனைவி கைது!

ஹொரனை காவல் பிரிவின் அரம்பகந்த பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து, தனது கணவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக தெரிவித்து பெண் ஒருவர் கைது...
- Advertisement -spot_img