Monday, June 8, 2026
No menu items!

சிறை

“போர் முடிந்துவிட்டது” – காசா நிலை குறித்து அறிவித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்!

காசாவில் இருந்து சிறைபிடிக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்காக இஸ்ரேலுக்குப் பயணம் செய்யும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “போர் முடிந்துவிட்டது” என்று அறிவித்துள்ளார். போர்நிறுத்தம் நிலைத்து நிற்கும் வகையில், காசா பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் நோக்கில் ஒரு “அமைதிக் குழு (Board of Peace)” விரைவில் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எகிப்தில் நடைபெறவுள்ள உச்சிமாநாட்டில் பங்கேற்கும்...

ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது – தாயாரும் விளக்கமறியலில்!

யாழ்ப்பாணம் - ஏழாலை, தெற்கு மயிலங்காடு பகுதியில் 10 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபரான 27 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. குறித்த இளைஞன் ஏற்கனவே ஒரு தடவை போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நிலையில் 6 மாதங்கள் சிறையில் இருந்தவர்....

பாகிஸ்தானில் 30 பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானில் பயணிகள் தொடருந்தை பயங்கரவாதிகள் நேற்று (11) சிறைபிடித்தனர். அதில் பயணம் செய்த 30 பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 500 ற்கும் மேற்பட்ட பயணிகள், பணயக் கைதிகளாகத் தடுத்துவைக்கப்பட்டனர். உலகளவில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில் தற்போதைய நிலவரப்படி 16 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பணயக் கைதிகளாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள 104 பேர் மீட்க்கப்பட்டுள்ளனர். ஏனைய பயணிகளை மீட்கும்...

யாரோ செய்த திருட்டை ராஜபக்ஷக்கள் மீது சுமத்தும் அரசு – நாமலின் ஆவேச கருத்து..!

“யாரோ ஒருவர் செய்த திருட்டுக்கு அதனை ராஜபக்ஷக்கள் மீது சுமத்தினால் ராஜபக்ஷக்கள் சிறைக்குச் செல்வதும் சம்பந்தப்பட்டவர்கள் விடுதலையாவதும் வழக்கமாகிவிட்டது. அரசாங்கமும் இதனை பழக்கமாக எடுத்துச்சென்றால் நாட்டில் இடம்பெறும் ஒவ்வொரு குற்றங்களையும் எங்கள்மீது சுமத்திவிட்டு குற்றவாளிகள் தலைமறைவாகிவிடுவார்கள்”- என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல்...

சிறை அதிகாரிகளிடமிருந்து தப்பிச் சென்றவர் மடக்கி பிடிப்பு..!

சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் ஒருவரை தம்புத்தேகம பொலிஸார் கைது செய்துள்ளனர். சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்த சந்தேக நபர், சுகவீனம் காரணமாக கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது தப்பிச் சென்றுள்ளார். அவர் குடிபோதையில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது தம்புத்தேகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளை நினைவுகூர்ந்து நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள்!

இலங்கை சிறைகளிலும் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு காலகட்டங்களில் சாவினைத் தழுவிய, தமிழ் அரசியல் கைதிகளை நினைவுகூர்ந்து நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் இடம்பெற்றது. 'வெலிக்கடை சிறைப்படுகொலை ' இடம்பெற்ற நாளான நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலை 3.05 மணிக்கு, யாழ்ப்பாணத்திலுள்ள 'தந்தை செல்வா கலையரங்கில்' நிகழ்வுகள்...

குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் பொது நினைவேந்தல்! 

இலங்கை சிறைகளிலும் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு காலகட்டங்களில் சாவினைத் தழுவிய தமிழ் அரசியல் கைதிகளை நினைவுகூர்ந்து அஞ்சலி செழுத்தும் நிகழ்வு பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வானது தமிழின வறலாற்றில் என்றுமே மறக்கமுடியாத 'வெலிக்கடை சிறைப் படுகொலை ' இடம்பெற்ற நாளான இன்று  வியாழக்கிழமை மாலை 3.05 மணிக்கு, யாழ்ப்பாணத்திலுள்ள 'தந்தை செல்வா கலையரங்கில்' ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. சமூகத்தின்...

வவுனியாவில் மூன்று கைதிகளுக்கு பொது மன்னிப்பு.!

வெசாக்  பௌர்ணமி தினத்தை முன்னிட்டு வவுனியாவில் 3 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அரசியலமைப்பின் 34 ஆவது சரத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பொது மன்னிப்பின் அடிப்படையில் நடாளாவிய ரீதியில் 10 பெண் கைதிகள் உட்பட 278 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் சிறு குற்றங்கள் மற்றும்...

அநீதிக்கு எதிராக வவுனியாவில் பாரிய போராட்டம்..!

சிவராத்திரி தினத்தன்று சிவ பக்தர்கள் மீதும் பொலிஸார் நடத்திய வன்முறைகளை எதிர்த்தும், கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள சிவபக்தர்களை விடுவிக்கக்கோரி பாரிய எதிர்ப்பு போராட்டம் ஒன்றை எதிர்வரும் 15 ஆம் திகதி வவுனியாவில் முன்னெடுக்கவுள்ளதாக  வெடுக்குநாறிமலை  ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பரிபாலன சபை தலைவர், செல்லத்துரை சசிகுமார் அறிவித்துள்ளார். இது குறித்த அவர் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில், எமது ஆலய...
- Advertisement -spot_img

Latest News

கணவரை கத்தியால் தாக்கி கொலை செய்த மனைவி கைது!

ஹொரனை காவல் பிரிவின் அரம்பகந்த பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து, தனது கணவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக தெரிவித்து பெண் ஒருவர் கைது...
- Advertisement -spot_img