காசாவில் இருந்து சிறைபிடிக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்காக இஸ்ரேலுக்குப் பயணம் செய்யும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “போர் முடிந்துவிட்டது” என்று அறிவித்துள்ளார்.

போர்நிறுத்தம் நிலைத்து நிற்கும் வகையில், காசா பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் நோக்கில் ஒரு “அமைதிக் குழு (Board of Peace)” விரைவில் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எகிப்தில் நடைபெறவுள்ள உச்சிமாநாட்டில் பங்கேற்கும் முன், ட்ரம்ப் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

“காசா தற்போது ஒரு சிதைவுப்பகுதியாக மாறியுள்ளது; ஆனால் விரைவில் அங்கு அமைதி நிலவும்,” என்று ட்ரம்ப் குறிப்பிட்டார்.

மேலும், காசா போர்நிறுத்தத்தை உறுதிப்படுத்துவதில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் கட்டார் அரசின் பங்களிப்பை அவர் பாராட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here