Sunday, June 7, 2026
No menu items!

சுகாதாரத்துறை

பரவிவரும் புதிய வகை நோய்த்தொற்று..!

கொங்கோ குடியரசில் பரவிவருவிகின்ற புதிய வகையான நோய்த்தொற்று காரணமாக 79 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த நாட்டு சுகாதாரத்துறை இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் அதிகமானோர் 15 முதல் 18 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நோய்த்தொற்றுக்கு காய்ச்சல், தலைவலி, இருமல், சுவாசிப்பதில் சிரமம் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் காணப்படுமெனவும் அந்த நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்…!

பொதுமக்களிடையே எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக, சுகாதாரத்துறை பொதுமக்களை எச்சரித்துள்ளது. எலிகளின் சிறுநீரால் நீர் மாசுபடுவதுடன், எலிக்காய்ச்சலை ஏற்படுத்தும் கிருமிகள் காயங்கள் ஊடாக உடலினுள் செல்லலாம் எனவும், சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கையாக, காயங்கள் உள்ள நபர்கள் தண்ணீருடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்குமாறு, சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

கிளிநொச்சி மருத்துவமனையில் இரண்டரை வயதுக் குழந்தைக்கு பாரதூரமான ஊசிமருந்து – மருத்துவர் அலட்சியம்!

நாய் கடிக்கு இலக்கான இரண்டரை வயது ஆண் குழந்தைக்கு, அதி வீரியமான பாரதூரமான (ஓவர்டோஸ்) ஊசி மருந்தை மருத்துவர் பரிந்துரைத்த நிலையில், தாதிய உத்தியோகத்தர் அதைக் கவனித்தமையால் பின்னர் சரியான ஊசி ஏற்றப்பட்ட சம்பவம் நேற்றுமுன்தினம் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் இடம்பெற்றுள்ளது. இரண்டரை வயதுக் குழந்தையொன்றின் கையில், அயல்வீட்டு நாய் கடித்துள்ளது. இதனையடுத்து பெற்றோர் குழந்தையை...

அனைத்து வைத்தியசாலைகளிலும் அவசர  சிகிச்சை பிரிவு ஸ்தாபிக்கப்பட வேண்டும் என ஆளுநர் பணிப்புரை!

வடக்கு மாகாண சுகாதாரத்துறை தொடர்பான விசேட கலந்துரையாடல் மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் (08/08/2024) நடைபெற்றது. ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் வடக்கு மாகாண சுகாதார நிர்வாக அதிகாரிகள் கலந்துக்கொண்டனர். மாகாண சுகாதார துறையில் காணப்படும் சிக்கல்கள், மேற்கொள்ள வேண்டிய பொறிமுறை மாற்றம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில்...

அரசவைத்தியசாலையில் மருந்துகளுக்கு தட்டுபாடு..!

அரச வைத்தியசாலைகளில் 52 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சர் ரமேஷ்பத்திரன தெரிவித்துள்ளார். இன்று(08.08) நாடாளுமன்றத்தில் மருத்துவ திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை அனைத்து உயிர்காக்கும் மருந்துகளும் வைத்தியசாலைகளில் உள்ளது. தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்தும் தேசிய நிலையமொன்றை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் சுகாதாரத்துறை தொடர்பான ஒன்பது...

மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவே அரச உத்தியோகஸ்தர்கள் கடமையாற்றுகின்றனர்; ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை தொண்டமானாறு பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட சித்த மத்திய மருந்தகம் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களால் நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. 60 மில்லியன் ரூபா செலவில் இந்த புதிய கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கட்டடம் அமைந்துள்ள 12 பரப்புக் காணி அந்த பகுதியை சேர்ந்த குடும்பத்தினரால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வின் போது உரையாற்றிய...

க்ரீம்களை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை…!

சருமத்தை வெண்மையாக்க பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான க்ரீம்களால் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை விட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று (03.07) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தேசிய வைத்தியசாலையின் தோல் சிகிச்சை நிபுணர் டாக்டர் இந்திரா கஹ்விட்ட இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும்...
- Advertisement -spot_img

Latest News

யாழில் 220 கிலோ கேரள கஞ்சா கண்டெடுப்பு!

யாழ்ப்பாணத்தின் அந்தணிபுரம் பகுதியில் 220 கிலோ எடையுள்ள 102 கேரள கஞ்சா பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உளவுத்துறை தகவலுக்கமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இன்று (07)...
- Advertisement -spot_img