Monday, November 16, 2026
No menu items!

ஜனாதிபதி தேர்தல்

முதலாவது வேட்புமனுவை கையளித்த திலித் ஜயவீர..!

மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர ஜனாதிபதி தேர்தலுக்கான முதலாவது வேட்புமனுவை கையளித்துள்ளார். வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது காலை 9.00 மணிக்கு ராஜகிரியில் உள்ள பொதுத் தேர்தல் செயலகத்தில் ஆரம்பமாகியுள்ள நிலையில் , பல வேட்பாளர்கள் வேட்புமனுக்களை சமர்ப்பிக்க ஏற்கனவே தேர்தல் செயலகத்திற்கு வருகை தந்துள்ளனர். ஜனசேத பெரமுனவின் தலைவர் பத்தரமுல்லை சீலரதன தேரர், சரத் பொன்சேகா,...

ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவாக ஒன்றுகூடிய பொதுஜன ஐக்கிய முன்னணி….! 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் புதிய கூட்டணி இணைந்து பொதுஜன ஐக்கிய முன்னணி உருவாக்கப்பட்டு,  இக்கூட்டணியின் செயற்குழு உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதோடு, இந்த கூட்டணியின் உத்தியோகபூர்வ இணையத்தளமும் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு இன்று (14) காலை பத்தரமுல்ல, வோட்டர்ஸ் எட்ஜில் நடைபெற்றுள்ளதுடன் கூட்டணியின்...

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மற்றுமொரு வேட்பாளர்..!

எக்சத் லங்கா பொதுஜன கட்சியின் சார்பில் ஜனக ரத்நாயக்க நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளார். எக்சத் லங்கா பொதுஜன கட்சியின் செயலாளர் நிஹால் பிரேம குமார தேசப்பிரிய இன்று (14.08) ஜனக ரத்நாயக்கவுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.  ஜனக ரத்நாயக்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக சில காலம் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

கட்டுப்பணம் செலுத்திய நாமல்..!

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான நாமல் ராஜபக்சவிற்கு கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. அவர் சார்பில் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம்  கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.

ரணிலை ஆதரிக்கும் ஜகத் பிரியங்கர….!

இம்முறை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் பிரியங்கர தெரிவித்துள்ளார். சற்றுமுன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து அவர் இதனை தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.      

கட்டுப்பணம் செலுத்தியோரின் எண்ணிக்கை மேலும் உயர்வு..!

இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. இதன்படி, ஜனாதிபதித் தேர்தலுக்கு 11 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கட்டுப்பாணம் செலுத்தும் காலம் எதிர்வரும் 14ஆம் திகதி நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளது. இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எவ்வாறு...

ஜனாதிபதி தேர்தலுக்கான புதிய வர்த்தமானி அறிவித்தல் வௌியானது..!

ஜனாதிபதி தேர்தலுக்கான ஊடக வழிகாட்டுதல்களை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதித் தேர்தலின் போது செய்தி அறிக்கையிடல், பிற அறிக்கையிடல் நிகழ்ச்சிகள், அரசியல் நிகழ்ச்சிகள் மற்றும் பிரச்சாரங்கள் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்னணு ஊடக நிறுவனங்கள், இணைய தளங்கள் மற்றும் சமூக ஊடக இணையதள...

விண்ணப்பங்கள் இன்றுடன் நிறைவு…!

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் கோரும் சுற்றறிக்கையை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் தகவலின்படி, தபால் மூலம் வாக்களிக்கும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, வாக்காளர் பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது. இதன்படி...

மோடியின் இலங்கை விஜயம் திடீரென ரத்து…

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் திட்டமிடப்பட்ட இலங்கை விஜயம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மோடியில் விஜயம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 20ஆம் திகதி மாதம் இலங்கை வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், இந்திய பிரதமரின் விஜயம் குறித்து ஆய்வு செய்திருந்தார். சமீபத்திய ஆண்டுகளில், இந்தியாவுடனான இருதரப்பு...

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதிரடி அறிவிப்பு…!!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்று முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த நிலையில், பெரமுனவின் ஜனாதிபதி வேட்டபாளர் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அல்ல என அறிவித்துள்ளது. இந்நிலையில், ரணில் விக்கிரமசிங்கவுக்கு எங்களின் அதரவை வழங்கப்போவதில்லை எனவும் தீர்மானித்துள்ளதாக இலங்கைக்கான முன்னாள் ரஷ்ய தூதுவரும், ராஜபக்ஷ குடும்ப உறுப்பினருமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். மேலும்...
- Advertisement -spot_img

Latest News

புதிய சம்பள சபை மூலம் தோட்டத் தொழிலாளருக்கு நிவாரணம்

தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய நெருக்கடி தொடர்பில் புதிய ஊதிய சபை ஒன்றை நியமித்து, அது தொடர்பான தரப்பினர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு பொருத்தமான நிவாரணம் வழங்க அரசாங்கம்...
- Advertisement -spot_img