Sunday, November 15, 2026
No menu items!

ஜனாதிபதி

மக்களுக்கு நிலவும் தீர்க்கப்படாத பிரச்சினைகளை அறிவிக்க அறிமுகப்படுத்தப்பட்ட தொலைபேசி இலக்கங்கள்!

மக்களுக்கு முகங்கொடுக்கும் தீர்க்கப்படாத பிரச்சினைகளை நேரடியாக அறிவிப்பதற்காக ஜனாதிபதி காரியாலயத்தினால் 3 தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, 0112 – 354 550, 0112 – 354 354 அல்லது 0114 – 354 354 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மக்களுக்கு நிலவும் தீர்க்கப்படாத பிரச்சினைகளை 24 மணி நேரமும் அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரிக்காவுக்கு 5 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சமாக வழங்கப்பட்டதா?

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஒருமுறை தமக்கு 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாக வழங்க முன்வந்ததாகவும், தான் பிரதமராக இருந்த காலத்தில் அதனை உடனடியாக நிராகரித்ததாகவும் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற பட்டயக் கணக்காளர்களின் 45ஆவது தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி, இலங்கையில் நிலவும் ஊழல்கள் குறித்துப் பேசினார். “அது எனக்கு நடந்திருக்கிறது....

ஐஸ்லாந்து பொதுத் தேர்தல் திகதி அறிவிப்பு!

ஐஸ்லாந்து பொதுத் தேர்தல் எதிர்வரும் 30 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அந்த நாட்டு ஜனாதிபதி உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார். 3 கட்சிகளால் ஸ்தாபிக்கப்பட்ட கூட்டணி அரசாங்கம் கவிழ்ந்துள்ளதாக அந்த நாட்டுப் பிரதமர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்திருந்தார். இந்தநிலையிலேயே ஐஸ்லாந்தின் பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.   <!-- -->

வீதி அபிவிருத்தி திட்டங்களின் வினைத்திறனை அதிகரிப்பது மிகவும் முக்கியமானது ; ஜனாதிபதி!

கிராமிய பொருளாதார அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு வீதி அபிவிருத்தி திட்டங்களின் வினைத்திறனை அதிகரிப்பது மிகவும் முக்கியமானது என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார். இந்த திட்டங்களுக்கான கொள்முதல் செயல்முறையை நெறிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார். ஒப்பந்தங்கள் ஒரு சிலரின் கைகளில் குவிவதை விட உள்ளூர் சமூகங்கள் பயனடைவதை உறுதிசெய்தார். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான...

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பதிலளித்த உதய கம்மன்பில!

2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் வெளியிடப்படாத இரண்டு அறிக்கைகளை வெளியிடுவதாக அரசாங்கம் உறுதியளித்தால் மாத்திரம் அவற்றை கையளிப்பதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், அறிக்கைகள் கிடைத்த பின்னரும் அரசாங்கம் அவற்றை வெளியிடத் தவறினால் என்ன...

ஜனாதிபதியின் செயலாளருக்கு அணிவிக்கப்பட்ட வெள்ளைப் பிரம்பு பாதுகாப்பு தினக்கொடி!

இன்றைய சர்வதேச வெள்ளைப் பிரம்பு பாதுகாப்பு தினத்துடன் இணைந்ததாக, கொடி விற்பனை வாரத்தை முன்னிட்டு நேற்று (15) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுக்கு முதல் கொடி அணிவிக்கப்பட்டது. இலங்கை பார்வையற்ற பட்டதாரிகள் சபையின் தலைவர் சுகத் வசந்த டி சில்வா ஜனாதிபதியின் செயலாளருக்கு கொடியை அணிவித்தார். கொடி விற்பனை மூலம்...

அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை;  மஹிந்த ராஜபக்ஷ!

அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, ராஜபக்ஷ அரசியலில் இருந்து தற்காலிகமாக விலகியுள்ளதாக குறிப்பிட்டார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த ராஜபக்ச, "இது ஒரு தற்காலிக இடைநிறுத்தம். அரசியல்வாதி ஓய்வு பெறுவதில்லை" என்று தெரிவித்தார். வரவிருக்கும் தேர்தல் குறித்து கருத்து...

மன்னார்/புனித சவேரியார் பெண்கள் கல்லூரி மாணவி தேசிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் இரண்டாம் இடம்…

கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்ட தேசிய  விஞ்ஞான ஒலிம்பியாட்  போட்டியில் பிரிவு 8/9 மன்/புனித சவேரியார் பெண்கள்  கல்லூரி மாணவி நயோலின் அபிறியானா  அன்ரோனியோ குபேரக்குமார்  இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளார். இவர் யாழ் இந்து கல்லூரியில் நடைபெற்ற மாகாண மட்ட போட்டியில் முதலாம் இடத்தினையும்,மகரகம ஜனாதிபதி கல்லூரியில் 3/8/2024 ல் நடைபெற்ற  தேசிய மட்ட போட்டியில்...

முன்னாள் ஜனாதிபதி பொது மக்களுக்கு வெளியிடவுள்ள விசேட அறிக்கை !

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வியாழக்கிழமை (17) பொது மக்களுக்கு விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். 2024 ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் விக்கிரமசிங்க பகிரங்க அறிக்கை ஒன்றை வெளியிடுவது இதுவே முதல் தடவையாகும். இந்த விசேட அறிக்கையில் 'நாட்டின் அரசியல் நடத்தை' மற்றும் தனது எதிர்காலத் திட்டங்கள் குறித்து முன்னாள்...

வினைத்திறன்மிக்க அரச சேவையை செய்ய  அரச உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பு அவசியமானது ;ஜனாதிபதி!

அரச உத்தியோகத்தர் தனது கடமை எல்லைக்குள் மேற்கொள்ளும் அனைத்து மக்கள்நல செயற்பாடுகளுக்கும் தாம் முன் நிற்பதாகவும், செய்யக்கூடாத ஒன்றைச் செய்தால் அது தொடர்பான நடவடிக்கைகளை எடுக்கத் தயங்கப்போவதில்லை. பிரஜைகளை திருப்திப்படுத்தும் வகையில் வினைத்திறன்மிக்க மற்றும் செயற்திறன்மிக்க அரச சேவையை உருவாக்குவதற்கு தற்போதைய அரச உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பு அவசியமானது எனவும், அதற்காக எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும்...
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் எம். பி சிவாஜிலிங்கம் காலமானார்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகர சபை தலைவருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தனது 69 வயதில் காலமானார். சனிக்கிழமை இரவு (நவம்பர் 14) சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த...
- Advertisement -spot_img