Sunday, November 15, 2026
No menu items!

ஜனாதிபதி

இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவிருக்கும் ஜனாதிபதி!

பொதுத் தேர்தலின் பின்னர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்வார் என்று அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இருந்தபோதும் இதுவரையில் அதற்கான தினம் முடிவு செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஐ.நா.சபையின்  உதவிச் செயலாளருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பு!

ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை இன்று (14) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். "பல பரிமாண பாதிப்புகளைப் புரிந்துகொள்வது: இலங்கை மக்கள் மீதான தாக்கம்" என்ற தலைப்பில் அவர் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் அறிக்கையை சமர்ப்பித்தார். இந்த அறிக்கையின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித்...

நிதியமைச்சுக்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி!

இலங்கை முழுவதும் அண்மைய சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியமைச்சுக்கு 1000 கோடி ரூபாயை ஒதுக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். நிவாரண சேவைகளுக்காக 50 மில்லியன் ரூபாயும்  வழங்கப்பட்டுள்ளது ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) படி, தேவைப்படுபவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் சரியான ஒருங்கிணைப்பை உறுதி செய்யுமாறு ஜனாதிபதி அரச அதிகாரிகளை வலியுறுத்தினார். வெள்ளம் மற்றும்...

இலஞ்சம் ஊழலை சிறிதளவும் சகித்துக்கொள்ள மாட்டோம் ; விஜித ஹேரத்!

நாங்கள் வழங்கியுள்ள உறுதிமொழிகளிற்கு ஏற்ப இலஞ்சம் ஊழலை சிறிதளவும் சகித்துக்கொள்ள மாட்டோம். இலஞ்சம் ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான  ஆணைக்குழு ஏற்கனவே  ஊழல் பற்றிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளது என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பை தளமாக வெளிநாட்டு இராஜதந்திரிகள் மத்தியில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, அரசாங்கம் ஏற்கனவே சில...

ஜனாதிபதித் தேர்தலில் 28 வேட்பாளர்கள்  தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்!

கடந்த மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 28 வேட்பாளர்களும் அவர்களது நியமனக் கட்சிகளும் மாத்திரமே முழுமையான தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பித்துள்ளன. தேர்தல் செலவு அறிக்கையை சமர்பிப்பதற்கான காலக்கெடு அக்டோபர் 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்ததாகவும், அதற்குள் 35 வேட்பாளர்கள் மட்டுமே தங்கள் அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இவற்றில், ஏழு வேட்பாளர்களின்...

3ஆவது முறையாக டொனால்ட் ட்ரம்பை கொலை செய்ய முயற்சி!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை கொலை செய்யும் திட்டத்துடன் துப்பாக்கிகளுடன் வந்த நபர் ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராக டிரம்ப் அறிவிக்கப்பட்டதிலிருந்து அவரை கொலை செய்ய முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், 3ஆவது முறையாக, டொனால்ட் ட்ரம்பை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது. அமெரிக்கா - கோசெல்லாவில்...

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க ஜனாதிபதி நடவடிக்கை…!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். அத்துடன், சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மக்களின் பாதுகாப்பு தொடர்பில் விசேட அவதானம் செலுத்துமாறும் நிவாரணப் பணிகளை வினைத்திறனாக முன்னெடுப்பதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறும் பாதுகாப்பு அமைச்சின்...

பிரசார செலவு அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் தொடர்பிலான அறிவிப்பு…!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது பிரசார செலவு அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடையவுள்ளது. குறித்த அவகாசம் இன்று (13.10) பிற்பகல் 03.00 மணியுடன் நிறைவடைவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் செலவின ஒழுங்குமுறை சட்டத்தின்படி, ஜனாதிபதி தேர்தல் முடிந்த 21 நாட்களுக்குள் செலவு அறிக்கைகளை வழங்க வேண்டும். எவ்வாறாயினும், அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதித்...

26 மாத காலப்பகுதியில் 24 நாடுகளுக்கு ரணில் பயணம்…!

கடும் பொருளாதார வீழ்ச்சியால் இலங்கைத்தீவு வங்குரோத்து நிலையை அடைந்திருந்த போது நாட்டை பொறுப்பேற்ற ரணில் விக்கரமசிங்க தனது ஜனாதிபதி பதவிக்காலமான 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடக்கம் 2024ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் வரையிலான 26 மாத காலப்பகுதியில் 24 நாடுகளுக்கு பயணங்களை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. அவர் பதவியேற்ற 2022ஆம் ஆண்டில் 4 நாடுகளுக்கு...

செலவு அறிக்கை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் நிறைவு…!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு செலவு அறிக்கை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நாளை (13.10) பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைகிறதென்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுவரை 8 பேர் மட்டுமே செலவு அறிக்கை அளித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. செலவு அறிக்கையை வழங்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் எம். பி சிவாஜிலிங்கம் காலமானார்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகர சபை தலைவருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தனது 69 வயதில் காலமானார். சனிக்கிழமை இரவு (நவம்பர் 14) சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த...
- Advertisement -spot_img