Tuesday, November 17, 2026
No menu items!

ஜனாதிபதி

ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மீண்டும் ஜனாதிபதியாக வருவார் ; மஸ்தான்!

நாடு மேலும் அபிவிருத்தி அடைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களை அனைவரும்  ஆதரிக்க வேண்டும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வன்னி தேர்தல் தொகுதியில் அதி கூடிய வாக்குகளை பெற்றுக் கொள்வார். அதே போன்று தேசிய ரீதியிலும் அதி கூடிய வாக்குகளை பெற்று ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவார் என கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர்   கே....

மரணத்துக்குப் பின்னரான பொது மன்னிப்பு..!

பிரித்தானிய ஆட்சியாளர்களால் நியாயமற்ற விதத்தில் தூக்கிலிடப்பட்ட கெப்டன் எட்வர்ட் ஹென்றி பேதிரிஸுக்கு, 109 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜனாதிபதியினால் மரணத்துக்குப் பின்னரான பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று (12.09) வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலில் இந்த பொது மன்னிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய ஆளுநர் ரொபர்ட் சாமர்ஸ் வெளியிட்ட பிரகடனத்தின் மூலம்...

காணா மலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்கவின் கருத்து!

‘‘நாட்டில் இடம்பெற்ற சிவில் யுத்தத்தின்போது வலிந்து காணா மலாக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுத்தருமாறு 15 வருடங்களாகக் கோரப்பட்டுவரும் நிலையில், எதிர்வரும் மூன்று வருடங்களுள் இந்தப் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுப் கொடுப்பதற்கான செயற்பாடுகளை நிறைவுசெய்து நிரந்தரத் தீர்வு வழங்கப்படும்’’ என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ஊடகம் ஒன்றிற்கு கருத்துகளை தெரிவிக்கும் போதே...

ஒன்பது நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் இலங்கை வருகை!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை கண்காணிப்பதற்காக ஒன்பது நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் இலங்கை வரவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் அழைப்பின் பேரில் இந்த கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். சர்வதேச கண்காணிப்பாளர்கள் இம்மாதம் 18ஆம் திகதி தமது கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளனர். இந்த கண்காணிப்பு குழுவில் தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு கூட்டமைப்பு...

தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவித்தல்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகள் அனைத்தும் அந்தந்த மாவட்டங்களுக்கு வெற்றிகரமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த வாக்குச் சீட்டுகள் தற்போது மாவட்டச் செயலகங்களின் பெட்டகங்களில் கடுமையான பொலிஸ் பாதுகாப்பின் கீழ், தேர்தல் வரை அவற்றின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்றன. தேர்தலுக்கு தயாராகும் வகையில், இம்மாதம் 20ஆம் திகதி மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு வாக்குச்...

மன்னார் முசலியில் சஜித்தை ஆதரித்து ஜளனி பிரேமதாச பரப்புரை!

ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து அவரது மனைவி ஜளனி பிரேமதாச மன்னார் முசலியில் பிரதேச செயலாளர் பிரிவில்   பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். குறித்த பரப்புரை நிகழ்வானது நேற்று (12) மாலை  இடம்பெற்றுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான  ரிசாட் பதியுதீனின் அழைப்பின் பேரில்  மன்னார் முசலி பொற்கேணியில்...

தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் 17கைதிகள் விடுதலை!

தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் நாடளாவியரீதியில் 359ற்கும் அதிகமான சிறைக் கைதிகள் ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதற்கமைய வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து17 கைதிகள் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 8பேர் வேறு குற்றங்களுக்காக மீண்டும் சிறையில்அடைக்கப்பட்டனர் என தெரிவிக்கப்படுகிறது. சிறியகுற்றங்கள் மற்றும், சிறிய அபராத தொகையைச் செலுத்த...

மட்டக்களப்பு சிறையிலிருந்து 11 ஆண் கைதிகள் விடுதலை..!

தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 350 கைதிகளுக்கு ஜனாதிபதியின் விசேட அரச பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டனர். அதன்படி, மட்டக்களப்பு சிறையிலிருந்து அத்தியட்சகர் என்.பிரபாகரன் தலைமையில் 11 ஆண் கைதிகள் இன்று (12.09) காலை 10.30 மணியளவில் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். சிறுகுற்றங்கள் புரிந்ததன் அடிப்படையில் தண்டனை பெற்று வந்த கைதிகளே...

ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்த கலைஞர் குழு!

ஒரு காலத்தில் வரலாற்றால் மறக்கப்பட்ட தலைவர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் நெருக்கடி மற்றும் போராட்டத்தின் மூலம் மீண்டும் முக்கியத்துவத்திற்கு கொண்டு வரப்பட்டதாக மூத்த நடிகர் ரோஜர் செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார். இலங்கையை சாத்தியமான அழிவுகளிலிருந்து காப்பாற்றி நிலையான ஆட்சியை மீட்டெடுத்தமைக்கு ஜனாதிபதி விக்கிரமசிங்கவே பெருமை சேர்த்தார். பொருளாதார நெருக்கடி இன்னும் முழுமையாகத் தீர்க்கப்படாத போதிலும், நாட்டை மீண்டும்...

பாராளுமன்ற உறுப்பினருக்கு  மரண அச்சுறுத்தல்!

பாராளுமன்ற உறுப்பினர் நாலக பண்டார கோட்டேகொடவுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து கூச்சலிட்ட நபர்களுக்கு எதிராக வில்கமுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிடும் நாமல் ராஜபக்ஷ வை ஆதரித்து லக்கல, ஹெட்டிபொல நகரில் கடந்த 9 ஆம் திகதி நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்திலேயே இச்சம்பவம்...
- Advertisement -spot_img

Latest News

கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் தீ விபத்து

கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் பயன்படுத்தப்படாத பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டு மூடப்பட்டிருந்த கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று (17) அதிகாலை சுமார் 3.45 மணியளவில் இந்த...
- Advertisement -spot_img