‘‘நாட்டில் இடம்பெற்ற சிவில் யுத்தத்தின்போது வலிந்து காணா மலாக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுத்தருமாறு 15 வருடங்களாகக் கோரப்பட்டுவரும் நிலையில், எதிர்வரும் மூன்று வருடங்களுள் இந்தப் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுப் கொடுப்பதற்கான செயற்பாடுகளை நிறைவுசெய்து நிரந்தரத் தீர்வு வழங்கப்படும்’’ என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ஊடகம் ஒன்றிற்கு கருத்துகளை தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
காணாமலாக்கப்பட்டவர்களின் பிரச்சினையை தீர்ப்பது தொடர்பான வேலைத்திட்டங்களை எதிர்வரும் மூன்று அல்லது நான்கு வருடங்களில் நிறைவுசெய்ய எதிர்பார்த்துள்ளோம்.
இந்த விடயத்தில் நிதிப் பிரச்சினை இருக்கிறது. எனவே, நிதிப் பிரச்சினை உள்ளிட்ட ஏனைய சகல விடயங்களையும் விரைவில் நிறைவு செய்வோம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தேர்தலுக்குப் பின்னர் சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்துபவராகவும் நாட்டின் புதிய ஜனாதிபதியாகவும் இருப்பதே தனது நம்பிக்கை என்றும் ரணில் குறிப்பிட்டார்.








