Monday, November 9, 2026
No menu items!

ஜனாதிபதி

கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரணில்..!!

சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்கவுக்கான மருத்துவ ஆலோசனைகளை கருத்தில் கொண்டு அவரை தேசிய மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அநுரவும் அரசாங்க சொத்தை, தனியார் தேவைகளுக்கு பயன்படுத்தியுள்ளார் – லிஹினி பெர்ணாண்டோ!!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளமைக்கு பல அரசியல் பிரமுகர்கள் உட்பட பலரும் தங்களது கருத்தை சமூக ஊடகங்களில் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மொரட்டுவ மாநகர சபை உறுப்பினர் லிஹினி பெர்ணாண்டோ தனது பேஸ்புக் கணக்கில் ரணிலை போன்றே ஜனாதிபதி அநுரவும் அரசாங்க சொத்தை, தனியார் தேவைகளுக்கு பயன்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ”ஒரு நாட்டின் ஜனாதிபதி,...

ரணிலை பார்வையிட சென்ற எதிர்க்கட்சித் தலைவர்!!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சிறை வைத்தியசாலையில் சந்தித்தார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (23) காலை சிறை வைத்தியசாலையில் அவரைச் சந்தித்து பார்வையிட்டார். விளக்கமறியல் உத்தரவின் பின்னர், ரணில் விக்கிரமசிங்க நேற்று (22) இரவு சிறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ரணிலை பார்வையிடச் சென்றார் மஹிந்த..!!

கைதுசெய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பார்வையிடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்றுள்ளதாகத் உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரணில் விக்ரமசிங்க கைதாகியது முதல் பல்வேறு அரசியல்வாதிகளும் அவரைக் காண்பதற்கு சென்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரணில்..!!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மருத்துவ ஆலோசனையின் பேரில் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கு இரண்டு மருத்துவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு மருத்துவ மேற்பார்வையில் வைக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியாக...

லண்டன் அழைப்பிதழை பகிர்ந்த UNP – கைதானார் ரணில்..!!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க ஆகியோருக்கு, 2023 செப்டம்பரில் லண்டன், வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகம் அனுப்பிய அழைப்பிதழின் நகலை ஐக்கிய தேசியக் கட்சி (UNP) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஜான் ராஃப்டெரி கையொப்பமிட்ட அழைப்பிதழ், ஜனாதிபதி விக்ரமசிங்க மற்றும் முதல் பெண்மணிக்கு அனுப்பப்பட்டது. மேலும், 2023 செப்டம்பர்...

நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார் முன்னாள் ஜனாதிபதி..!!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார். இன்று (22) பிற்பகல் அவர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று காலை முன்னிலையான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டிருந்தார். முன்னாள்...

சற்று முன்னர் கைதானார் ரணில் விக்ரமசிங்க..!!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதியாக அவர் பணியாற்றிய காலப்பகுதியில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக இன்று காலை அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார். இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இலங்கை வரலாற்றில்  ஜனாதிபதியாக பதவி வகித்த  ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே...

ரணில் விக்ரமசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை..!!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜனாதிபதியாக அவர் பணியாற்றிய காலப்பகுதியில் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு!

கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினர் நேற்று (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தனர். வருடத்திற்கு மூன்று முறை நடைபெறும் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையில் கலந்துரையாடப்பட்ட முக்கிய விடயங்கள் குறித்து கர்தினால் ஆண்டகை, ஜனாதிபதிக்கு விளக்கினார். மேலும், கத்தோலிக்க சபையில் எழுப்பப்பட்ட...
- Advertisement -spot_img

Latest News

எம்.பியின் 39 ட்ரோன்கள் சுங்கத்தில் தடுத்து வைப்பு 

சிங்கப்பூரிலிருந்து திரும்பிய ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹ கொண்டு வந்த 39 ட்ரோன்களை தேவையான அனுமதிகள் சமர்ப்பிக்கப்படும் வரை...
- Advertisement -spot_img