பிரித்தானியாவில் கால்நடைகளை பாதிக்கும் புதிய வகையான ‘ப்ளூடங்’ (Bluetongue) என அழைக்கப்படும் வைரஸ் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த வைரஸ் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது அல்ல எனினும், மாடுகள் மற்றும் ஆடுகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது..
பிரித்தானியாவின் நார்ஃபோல்க் (Norfolk) பகுதியில் உள்ள ஹாட்டிஸ்கோ (Haddiscoe) என்ற இடத்தில் ஒரு ஆடு இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ப்ளூடங் வைரஸ் கால்நடைகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது என்பதால் இதனைத் தடுக்க 20 கிலோமீட்டர் கட்டுப்பாட்டு வட்டாரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த வருடத்தின் மே மாதத்தில் புதிய வகை வைரஸ் ஒன்று பரவும் ஆபத்து இருப்பதாக பிரித்தானிய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.
தற்போது, நெதர்லாந்து, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ், லக்சம்பர்க், டென்மார்க் போன்ற நாடுகளிலும் இந்த வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது.