தமிழ் அரசுக் கட்சி
இலங்கை அரசியல்
தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு..!
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவினருக்கும், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றையதினம் (05.12.2024) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகள், காணி விடுவிப்பு மற்றும் காணி அபகரிப்பை நிறுத்துதல், தேசிய இனப்பிரச்சினைத் தீர்வு குறித்த நகர்வுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டிருந்தது.
இந்தச் சந்திப்பில் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற...
இலங்கை அரசியல்
மக்கள் ஆணையால் தமிழரசு மீள நிமிரும்; சிவஞானம் சிறீதரன்..!
எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு மக்கள் வழங்கப்போகும் ஆணைதான், எமது மக்கள் விரும்பும் வகையிலான கட்சியின் மீளெழுச்சிக்கு வித்திடும் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்.தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளரான சிவஞானம் சிறீதரன் அவர்களை ஆதரித்து, நேற்றைய தினம் (06.11.2024)...
இலங்கை அரசியல்
தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் களமிறக்கப்படும் புதிய முகங்கள்…!
நாட்டில் ஏற்பட்ட மாற்றம் தமது பிரதேசங்களிலும் ஏற்படவேண்டும் என விரும்பும் தமிழ் மக்களின் அபிலாஷைக்கு அமைய எதிர்வரும் பொதுத்தேர்தலில் 'நிரந்தர' அரசியல்வாதிகளை நீக்கி, ஆற்றல்மிக்க புதிய முகங்கள் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் களமிறக்கப்பட வேண்டும் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் கடந்த செவ்வாய்க்கிழமை (24.09) நள்ளிரவுடன் பாராளுமன்றம்...
இலங்கை அரசியல்
அரியநேத்திரனுக்கு ஆதரவு வழங்கும் சிறீதரன்….!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு பூரண ஆதரவை வழங்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உறுதியளித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
மேலும் சந்திப்புக்கு பின்னர் இருவரும் கூட்டாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழ்...
Top
ஐனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் இருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கை!
ஐனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் இருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கையொன்று இன்றைய தினம் திங்கட்கிழமை கைச்சாத்திடபட்டது.
தமிழ் சிவில் சமூகத்திற்கும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுக்கு இடையிலும் இந்த உடன்படிக்கை யாழ்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் சுப நேரமான மதியம் 12.12 க்கு கைச்சாத்திடப்பட்டது.
கடந்தகாலங்களில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களில் தமிழ் மக்கள் எவருக்கு...
Latest News
பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு
பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது.
உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...


