Saturday, September 26, 2026
No menu items!

தேங்காய் விலை

இடைத்தரகர்கள் காரணமாக தேங்காய் விலை ஏற்றம் – தெங்கு உற்பத்தி சபை விளக்கம்!

இலங்கையில் தேங்காய் விலை உயர்வுக்கு இடைத்தரகர்களின் அதிக இலாப மீட்டல் முக்கிய காரணம் என தெங்கு உற்பத்தி சபை தெரிவித்துள்ளது. அதன்படி, ஏலங்களில் ஒரு தேங்காய் ரூ.134க்கு கொள்வனவு செய்யப்படுவதால், அது சந்தையில் ரூ.180க்கு விற்பனை செய்யப்படுகின்றது. இதனால் இடைத்தரகர்கள் ரூ.40 முதல் ரூ.50 வரை இலாபம் பெறுகின்றனர் என்று சபை தெரிவித்துள்ளது. தேங்காய்க்கு நிர்ணய விலை...

தேங்காய் பொருட்களை இறக்குமதி செய்யும் அமைச்சரவை அனுமதி பத்திரம் சமர்ப்பிப்பு!

உள்ளூர் சந்தையில் தேவையற்ற தேங்காய் விலை உயர்வைத் தடுக்கும் முயற்சியில், பல தேங்காய் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அங்கீகாரம் அளிக்கும் அமைச்சரவைப் பத்திரம் இந்த வாரம் சமர்ப்பிக்கப்படும் என்று தேங்காய் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் சாந்த ரணதுங்க தெரிவித்தார். தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி, இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை...

தேங்காய் விலையில் மாற்றமா?

நாட்டில் தற்போது நிலவும் தேங்காய் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, இன்னும் 2 வாரங்களில் 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் எதிர்பார்ப்பதாக தேங்காய் மேம்பாட்டு அதிகாரசபையின் தலைவர் சாந்த ரணதுங்க தெரிவித்துள்ளார். ஹிரு பலய அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அதன்படி, தற்போது 250 ரூபாவாக உள்ள ஒரு...

பணவாட்டத்தில் அதிகரித்த தேங்காய் விலை-அரசு தேங்காய் அடித்ததா?

மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகளின்படி, டிசம்பர் 2024 இல் தேங்காய் ஒன்றின் சராசரி விலை ரூ.168.90 ஆக இருந்தது. டிசம்பர் 2023ல் இதன் விலை ரூ.111.67 ஆக இருக்கும். அதாவது ஓராண்டுக்குள் 51.24% விலை உயர்வு! இவ்வகையில், ஒரு வருடத்திற்குள் தேங்காய் விலை 51.24% அதிகரித்த அதேவேளை, நாட்டின் ஒட்டுமொத்த விலை மட்டம்...

அதிகரித்துள்ள தேங்காய் விலை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் வரை அமுலில் !

சந்தையில் அதிகரித்துள்ள தேங்காய் விலை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் வரை அமுலில் இருக்கும் என தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. நாட்டின் சில பிரதேசங்களில் தேங்காய் ஒன்று தற்போது 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது. நகர்ப்புறங்களை அண்மித்த பகுதிகளில் குறைந்த விலையில் தேங்காயை விற்பனை செய்வதற்கான விசேட வேலைத்திட்டத்தை எதிர்வரும்...

தேங்காய் விலை அதிகரிப்பு!

சந்தையில் தேங்காய் விலை மேலும் அதிகரித்துள்ளது. சில பகுதிகளில் தேங்காய் ஒன்று 150 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். கடந்த காலங்களில் தேங்காய் ஒன்று 90 ரூபாய் முதல் 100 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டது.  
- Advertisement -spot_img

Latest News

சாதாரண தரப் பரீட்சை மீளாய்வு முடிவுகள் வெளியானது

2025 (2026) க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் மீளாய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மீளாய்வுக்கு விண்ணப்பித்த பரீட்சார்த்திகள் தங்களது புதுப்பிக்கப்பட்ட முடிவுகளை பரீட்சைகள், திணைக்களத்தின்...
- Advertisement -spot_img