இலங்கையில் தேங்காய் விலை உயர்வுக்கு இடைத்தரகர்களின் அதிக இலாப மீட்டல் முக்கிய காரணம் என தெங்கு உற்பத்தி சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, ஏலங்களில் ஒரு தேங்காய் ரூ.134க்கு கொள்வனவு செய்யப்படுவதால், அது சந்தையில் ரூ.180க்கு விற்பனை செய்யப்படுகின்றது. இதனால் இடைத்தரகர்கள் ரூ.40 முதல் ரூ.50 வரை இலாபம் பெறுகின்றனர் என்று சபை தெரிவித்துள்ளது.

தேங்காய்க்கு நிர்ணய விலை அறிவிக்கப்படாததே விலை உயர்வுக்குக் காரணம் என சபையின் தலைவர் சுனிமல் ஜெயக்கொடி கூறினார். மேலும், உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், அதன் பலன் நுகர்வோருக்கு கிடைக்கும் வகையில் விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here