Friday, April 24, 2026
No menu items!

தேசிய கணக்காய்வு அலுவலகம்

கணக்காய்வாளரை தெரிவு செய்வதற்கான திகதி வெளியானது!

கணக்காய்வாளர் பதவிக்குத் தகுதியான நபரை நியமிப்பதற்காக அரசியமைப்புச் சபை எதிர்வரும் 22ஆம் திகதி ஒன்றுகூடவுள்ளது. இந்த பதவிக்கான தகுதியான ஒருவரின் பெயர் ஜனாதிபதியால் எதிர்வரும் சில நாட்களில் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கணக்காய்வாளர் பதவியிலிருந்த டபிள்யூ. பி. சி. விக்ரமரத்ன, கடந்த 8ஆம் திகதி ஓய்வுபெற்றார். தேசிய கணக்காய்வு அலுவலகத்தில் சிரேஷ்ட அதிகாரிகள் இருவர் உள்ள...

கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு 16 கோடி ரூபாய் கடன் வைத்துள்ள பேராசிரியர்கள்..!

கொழும்பு பல்கலைக்கழகத்துடன் மேற்கொண்டிருந்த ஒப்பந்தங்களை மீறிய 35 பேராசிரியர்களிடமிருந்து 159,907,138 ரூபாய் மீள பல்கலைக்கழகத்துக்கு செலுத்தப்படவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் பல்கலைக்கழகங்கள் தொடர்பில் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது. கலாநிதி பட்டங்களுக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் குறித்த பட்டத்துக்காக செலவாகும் பணத்தை மீள செலுத்தாமல் பல்கலைக்கழக சேவையை மோசடியான ரீதியில் விட்டுச் செல்வதால்...

சர்ச்சைக்குரிய eVisa மற்றும் ePassport-டப்ளியூ.பீ.சி.விக்ரமரத்ன..!

சர்ச்சைக்குரிய eVisa மற்றும் ePassport பரிவர்த்தனைகள் தொடர்பான கணக்காய்வு அறிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக டப்ளியூ.பீ.சி.விக்ரமரத்ன தெரிவித்தார். இந்த விசாரணைகள் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளதாகவும், பல முறைகேடுகள் தெரியவந்துள்ளதாகவும் தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. அந்த பரிவர்த்தனைகள் தொடர்பான நிறுவனங்களிடமிருந்து அறிக்கைகளை அழைக்கும் பணி தற்போது நடைபெற்று வருவதாக அலுவலகம் கூறுகிறது. eVisa மற்றும் ePassport...

அரசாங்கத்துக்கு வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவிப்பு..!

சுங்கக் கிடங்குகளில் அசெம்பிள் செய்யப்பட்டு, சுங்கத்துறை அமைச்சரின் சிபாரிசுக்கமைவாக உள்ளூர்ச் சந்தைக்கு விடப்பட்ட 326 வாகனங்களுக்கு வரிச்சலுகை வழங்கியதன் மூலம் அரசாங்கத்துக்கு 10,38,03,200 ரூபா வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. சுங்கக் கிடங்கின்  வாகன உதிரிப்பாகங்களை அசெம்பிள் செய்து தயாரிக்கப்படும் இந்த வாகனங்கள், கிடங்கிலிருந்து விடுவிக்கப்படும்போது, ​​அவற்றை இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களாகக்...

காணாமல் போயுள்ள 4000 வாகனங்கள்…!

சுகாதாரம், கல்வி , தபால் , நீர்ப்பாசனம் மற்றும் ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட அரச திணைக்களங்களின் சுமார் 4000 வாகனங்கள் கடந்த தினங்களில் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் தேசிய கணக்காய்வு அலுவலகம் அனைத்து அரச வாகனங்களும் உள்ளடங்கும் வகையிலான விசேட கணக்காய்வை நேற்று (27.09) ஆரம்பித்துள்ளது. இந்த கணக்காய்வின் பின்னர் காணாமல் போயுள்ள அல்லது...

மண்சரிவு அபாயம் உள்ள பிரதேசத்தில் வாழும் மக்கள்..!

கண்டி மாவட்டத்தில் 1386 குடும்பங்கள் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்பதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் உள்ள 20 பிரதேச செயலகப் பிரிவுகளில் 1845 குடும்பங்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், 19 பிரதேச செயலகப் பிரிவுகளில் 231 குடும்பங்கள் மாத்திரமே கடந்த வருடம் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி...
- Advertisement -spot_img

Latest News

ஈரான் கால்பந்து வீரர்கள் பாதிக்கப்படுவதை விரும்பவில்லை;ட்ரம்ப்

2026 உலகக் கிண்ணத்தில் ஈரான் கால்பந்து வீரர்கள் விளையாடலாம், எனினும் அவர்களுடன் ஐ.ஆர்.ஜி.சி. (இஸ்லாமியப் புரட்சிகரக் காவலர் படை) அமைப்புடன் தொடர்புடைய எவரும் பங்குபற்ற முடியாது...
- Advertisement -spot_img