Monday, June 8, 2026
No menu items!

தையிட்டி விகாரை

விகாரைக்கு எதிராக யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்..!!

தையிட்டி விகாரைக்கு எதிராக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகம்  முன்பாக போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். “தையிட்டி எங்கள் சொத்து - எங்கள் காணிகளை அபகரிக்காதே” என பிரதானமாக கோஷங்களை எழுப்பிய மாணவர்கள் விகாரையை அகற்ற கோரி இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். தையிட்டி சட்டபூர்வமற்ற விகாரை விவகாரத்திற்காக சாத்வீகமான முறையில் போராட்டம் நடைபெற்றபோது சைவ சமயத்தலைவர்களில் ஒருவரான நல்லூர சிவகுரு...

யாழ் தையிட்டி விகாரையை அகற்றுமாறு மக்கள் இன்று போராட்டம்..!

யாழ். வலிகாமம் வடக்கு – தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தியும் , பொது மக்களின் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தியும் இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த விகாரை அமைக்கப்பட்டு , திறந்து வைக்கப்பட்டதிலிருந்து ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும், இவ்விகாரையை அகற்றுமாறு கோரி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர், காணியின் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர்...

அனுர அரசே தையிட்டி விகாரையின் கட்டுமாணத்துக்கு முக்கிய கரணம் – கஜேந்திரகுமார் தெரிவிப்பு!

தையிட்டி விகாரை விவகாரத்தில் அது கட்டப்பட்ட விதம் சட்டவிரோதம் தான் என்ற நிலைப்பாட்டில் எந்தவொரு தமிழ் அரசியல் கட்சியிடமும் மாற்று கருத்து இருக்கப்போவதில்லை என சுட்டிக்காட்டிய தமிழ் தேசிய காங்கிரசின் தலைவர் கஜேந்திரகுமார் போன்னம்பலம், தையிட்டி விகாரையின் கட்டுமாணத்துக்கு முக்கிய கரணமாக இருந்தவர்கள் இந்த NPP என்ற JVP யினர் தான் என்றும் சுட்டிக்காட்டியுள்ளர். யாழ்ப்பாணத்தில்...

தையிட்டி விகாரை தொடர்பில் அரசாங்கத்தின் பதில் என்ன? கேள்வி எழுப்பிய MP. சிறிதரன்!

தையிட்டி விகாரை சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருக்குமாயின் அதற்காக அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கேள்வி எழுப்பினார். வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் அவர் இந்த கேள்வியை முன்வைத்தார். அத்துடன் தங்களின் காணியைக் கோரி போராட்டங்களை முன்னெடுத்து வரும் காணி உரிமையாளர்களுக்கு அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன்...

தையிட்டி விகாரை பிரச்சினையை தீர்ப்பதாக சிவசேனை அமைப்பினர் உறுதி..!

தையிட்டி விகாரை பிரச்சினையை தாம் ஆறு மாத காலத்திற்குள் தீர்த்து வைப்போம் என சிவசேனை அமைப்பினர் உறுதியளித்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில், மக்களின் காணி மக்களுக்கே என்பதில் நாமும் உறுதியாக இருக்கிறோம். இது தொடர்பில் தையிட்டி விகாரை அமையப்பெற்றுள்ள காணி உரிமையாளர்களுடன் நாம் பேசவுள்ளோம். அவர்களுடன் பேசிய பின்னர்...

தையிட்டி விகாரை விவகாரம் – ஊடகவியலாளர்களிடம் பொலிஸார் தீவிர விசாரணை..!

"தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் " என முகநூலில் பகிரப்பட்ட பதிவு தொடர்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்களிடம் பலாலி பொலிஸார் சுமார் 06 மணி நேரம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வாக்குமூலங்களை பெற்றுள்ளனர். " தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் .." என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பெயரில் போலி முகநூல்களில் பதிவுகள்...

தையிட்டி விகாரை – சமாதான பணியகம் கடும் கண்டனம்..!

தமிழர்களுடைய நிலங்களை அபகரித்து நிற்கும் தையிட்டி விகாரை தொடர்பில் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகம் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதத்தை பின்பற்றக்கூடியவர்கள் அதிகமாக வாழுகின்ற வட கிழக்கு மாகாணங்களில் யுத்தத்திற்கு பின்பு பல இந்து கிறிஸ்தவ ஆலயங்களின் புனரமைப்பு, மீள்கட்டுமானப்பணிகள் மற்றும் அரச படைகளின் கட்டுப்பாட்டிற்கு கீழுள்ள ஆலய காணிகளை விடுவித்தல் போன்ற...

தையிட்டி விகாரை விவகாரம் – வாக்குமூலம் வழங்க சென்றவர்களுக்கு நேர்ந்த கதி..!

தையிட்டி விகாரை போராட்டம் தொடர்பாக செல்வராஜா கஜேந்திரன், வாசுகி சுதாகரன், வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் நேற்றைய தினம் வாக்குமூலம் பெறுவதற்காக பலாலி பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டனர். தையட்டி விகாரையில் கடந்த 12 ஆம் தேதி மேற்கொண்ட போராட்டத்து தொடர்பில் விகாரையின் பிக்கு வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய பொலிசாரால் குறித்த வாக்குமூலம் பெறப்பட்டது. இதற்காக அழைக்கப்பட்ட மூவரையும் நேற்று...

தையிட்டி விகாரை விவகாரம் –  ஸ்ரீதரன் எம்.பி கடும் கண்டனம்..!

நாட்டிலுள்ள சட்டம் யாவருக்கும் சமம் என்றால் தையிட்டியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டுமானம் தகர்க்கப்பட வேண்டும் என்பது தமது நிலைப்பாடு என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனைத் தெரிவித்த அவர், இந்த கருத்தினை தாம் இனவாத நோக்கில் முன்வைக்கவில்லை...

மாற்றுக் காணி என்ற பேச்சுக்கே இடமில்லை – காணி உரிமையாளர்கள் போராட்டம்..!

பூர்வீக நிலத்தின் உரிமையாளர்களாகிய நாம் உரிமங்களுடன் இருக்க தையிட்டி விகாரை நிர்மாணிக்கப்பட்ட நிலப்பரப்பும், அதனை அண்டிய மக்களின் காணி நிலங்களும் விகாரைக்குரியதென்று கூறுவதை ஏற்க முடியாது என கூறியுள்ள தையிட்டி காணி உரிமையாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் பௌர்ணமி நாளன்று போரட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை...
- Advertisement -spot_img

Latest News

எத்தியோப்பியாவில் கடத்தப்பட்ட இலங்கையர்கள் மீட்பு!

எத்தியோப்பியாவில் கடத்தப்பட்ட மூன்று இலங்கையர்கள், ஒருங்கிணைந்த காவல்துறை நடவடிக்கை மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக ஃபைடல் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த மூவரையும் கடத்தி, 90,000 அமெரிக்க டொலர்...
- Advertisement -spot_img