Friday, November 20, 2026
No menu items!

நாடாளுமன்ற உறுப்பினர்

தமிழ் மக்களின் சமகால அரசியல் விவகாரம் பற்றி கனேடிய தூதுவருடன் கலந்துரையாடல்!

இலங்கைக்கான கனேடிய தூதுவர் டேவிட் மெக்கின்னனுக்கும் தமிழ் தேசியப் பரப்பில் இயங்கும் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பிலுள்ள கனேடிய தூதரகத்தில் நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பில், இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் உட்பட அந்த கட்சியின் 7 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். அத்துடன், தமிழ் தேசிய மக்கள்...

நாடாளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது; குற்றம் சுமத்திய எ.ம்.பி அர்ச்சுனா!

தமது நாடாளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாகத் தாம் முறைப்பாடு செய்துள்ள போதிலும் அது தொடர்பில் விசாரிக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். தமக்கு உரையாற்றுவதற்கு அரசாங்க தரப்பு நேரம் ஒதுக்கவில்லை என்றும் தமது முறைப்பாடு தொடர்பில் விசாரிப்பதில் காலதாமதம் ஏற்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். உடனடியாக இந்த பிரச்சினைக்குத் தீர்வு வழங்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்...

மஹிந்தவுடன் மோதுவதைவிடுத்து மகன் நாமலுடன் மோதுங்கள்; சவால் விடுத்த சாமர சம்பத் தஸநாயக்க!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகப்பூர்வ இல்லத்திலிருந்து வெளியேறினால், அவருக்கு 10 வீடுகளையும் மக்கள் வாங்கிக் கொடுக்கும் அளவிற்கு ஆதரவு வழங்குவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று (21) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற க்ளின் ஸ்ரீலங்கா தொடர்பான விவாதத்தின் போது அவர் இதனைத் தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ஷ தங்கியுள்ள வீட்டை எடுத்தால், அதை...

ஆறு மாதங்களில் பாதுகாப்பு தேடுவீர்கள் – சாமர எம்.பி அரசுக்கு சவால்..!

‘‘எதிர்க்கட்சியிலுள்ள எங்களுக்கு பாதுகாப்பு அவசியமில்லை. அரசாங்கத்திலுள்ளவர்களுக்கே பாதுகாப்பு தேவைப்படுகின்றது. இன்னும் ஆறு மாதங்களில் அவர்கள் பாதுகாப்பைத் தேடும் நிலைமை உருவாகும் என்று புதிய ஜனநாயக முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு...

உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறிய மஹிந்த ராஜபக்ஷ!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது உத்தியோகப்பூர்வ இல்லத்திலிருந்து எந்த சந்தர்ப்பத்திலும் வெளியேறுவதற்குத் தயாராகவிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நெலும் மாவத்தை பகுதியில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று(21.01.2025) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதற்கான கடிதம் கிடைக்கும் வரையில் காத்திருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்...

அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை..!

யாழ்பாண மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராகப் போக்குவரத்து மற்றும் தண்டனைக் கோவை சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் காவல்துறை அறிவித்துள்ளது. அனுராதபுரம் - ரம்பேவ பகுதியில் வைத்து நேற்று அதிகாலை இராமநாதன் அர்ச்சுனா காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போக்குவரத்து விதிகளை மீறியமைக்காக அவரது வாகனத்தை நிறுத்திய காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர்...

SJB மற்றும் UNP இணையுமா? – விசேட கலந்துரையாடல் இன்று..!

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி எதிர்கால அரசியல் செயற்பாடுகளில் இணைந்து செயற்படுவது தொடர்பிலான முதலாவது கலந்துரையாடல் இன்று (20/1/2025) இடம்பெறவுள்ளது. இரு தரப்பு குழு உறுப்பினர்களிடையே குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். மேலும், இரு தரப்பினரின் முன்மொழிவுகளையும் கருத்தில் கொண்டு...

பொது மக்கள் தொடர்பாடல் அலுவலகம் யாழில் திறந்து வைப்பு..!

தேசிய மக்கள் சக்தியின் "பொது மக்கள் தொடர்பாடல் அலுவலகம்"  யாழ்ப்பாணத்தில் இன்று (20/1/2025) திறந்து வைக்கப்பட்டது. யாழ். பலாலி வீதி, கந்தர்மடத்தில் இந்த அலுவலகம் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணநாதன் இளங்குமரன், ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன், கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் இளங்குமரன் எம்.பி – பின்னணி என்ன?

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் இன்று (1/19/2025) பிற்பகல் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு சென்று நிலைமைகளை பார்வையிட்டிருந்தார். இதன்போது போருந்து நிலையத்தில் இருந்த மக்களிடம் தாங்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்கள் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார்.

சாணக்கியன் தலைமையில் நிதி மோசடியா? – அன்ரனிசில் ராஜ்குமார் தெரிவிப்பு..!

நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு ஒதுக்கப்பட்ட விசேட நிதி 400 மில்லியன் ரூபாவினால் 65 ஆயிரம் வாக்குகளை பெற்றாரே தவிர உண்மையான வெற்றி அல்ல. அதேவேளை கல்லாற்றில் கூட்டுறவு சங்க கட்டிடம் நிர்மானிக்க 50 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டு கட்டிடம் நிறைவடைந்ததாக பணம் வழங்கப்பட்டது. ஆனால் கட்டிடமே கட்டி முடிக்காமல் நிதி மோசடி இடம்பெற்றுள்ளது. இது...
- Advertisement -spot_img

Latest News

தமிழரசு கட்சி வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானம்!

இலங்கை தமிழரசு கட்சி 2027 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளது. இன்று (20) பாராளுமன்றத்தில் உரையாற்றிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன்...
- Advertisement -spot_img