Friday, July 17, 2026
No menu items!

நாடாளுமன்ற உறுப்பினர்

நாடாளுமன்ற குளத்தில் விழுந்த நிஹால் அபேசிங்கவின் வாகனம்..!

தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி நிஹால் அபேசிங்கவின் வாகனம் நேற்று (26.11.2024) மாலை நாடாளுமன்ற வளாகத்திலுள்ள குளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. சம்பவம் இடம்பெற்ற போது வைத்தியர் அபேசிங்க வாகனத்தில் இருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். புதிதாக தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செயலமர்வில் கலந்துகொண்ட பாராளுமன்ற...

எதிர்க்கட்சித் தலைவரின்  ஆசனத்தில் அமர்ந்தமைக்காக மன்னிப்பு கோரிய அர்ச்சுனா!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஆசனத்தில் அமர்ந்தமைக்காக நாடாளுமன்ற பொதுச் செயலாளர் குஷானி ரோஹனதீரவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். பத்தாவது நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட திசைமுகப்படுத்தல் செயலமர்வு நேற்று இடம்பெற்றது. இந்த செயலமர்வின் இடைநடுவே அவர் மன்னிப்பு கோரியுள்ளார். தான் தெரிந்து அந்த ஆசனத்தில் அமரவில்லை. அது எதிர்க்கட்சித்...

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர் பதவியிலிருந்து எச்.எம்.எம். ஹரீஸ் நீக்கம்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர் பதவியிலிருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ், உடன் அமுலாகும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளார். அந்த கட்சியின் பொதுச் செயலாளர் நிஸாம் காரியப்பர் ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த பொதுத் தேர்தல் காலப்பகுதியில் கட்சிக்கு எதிரான வகையில் பிரசாரங்களை முன்னெடுத்தமை தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், குறித்த விடயம் தொடர்பில்...

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராக சட்டநடவடிக்கை; சபாநாயகர் தெரிவிப்பு!

யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் சமூக ஊடக கணக்குகள் ஆய்வு செய்யப்படும் என சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல தெரிவித்துள்ளார். அத்துடன், அவரது கருத்து தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அஸ்கிரி மற்றும் மல்வத்து மகாநாயக்கர்களை நேற்று சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற...

அர்ச்சுனாவிற்கு எதிரான முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் இன்னமும் ஆரம்பமாகவில்லை – நிஹால் தல்துவ தெரிவிப்பு..!

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் அவருக்கு  எதிராக சிஐடியினரிடம் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் இன்னமும் ஆரம்பமாகவில்லை என பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். புதிய நாடாளுமன்ற உறுப்பினர் முகநூலில் பதிவு செய்த கருத்து தொடர்பில் சிவில் சமூக பிரதிநிதிகள் சிலர் சிஐடியினரிடம் முறைப்பாடு செய்துள்ளனர் என பொலிஸ் பேச்சாளர்...

தமிழர்களுக்கான அரசியல் தீர்வுதான் என்ன? இந்தியாவிடம் இ.த.க.கேட்டது என்ன?

தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆவணப்படுத்துவதற்கும், அதனை இந்திய உயர்ஸ்தானிகரிடம் கையளிப்பதற்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று கொழும்பில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போதே, குறித்த தீர்மானம் எட்டப்பட்டதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். அத்துடன்,...

நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படுவது சம்பளம் அல்ல கொடுப்பனவு; குஷானி ரோஹணதீர…!

நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படுவது சம்பளம் அல்ல கொடுப்பனவு என இலங்கை நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார். ஊடகமொன்றின் நிகழ்ச்சி ஒன்றில் இணைந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சுமார் 54,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். மேலும் கருத்து தெரிவித்த அவர், அதற்கு மேலதிகமாக, வருகை கொடுப்பனவாக...

நாளைய தினம் தமது உத்தியோகபூர்வ இல்லங்களை மீள ஒப்படைக்குமாறுமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பணிப்புரை !

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளைய தினம் தமது உத்தியோகபூர்வ இல்லங்களை மீள ஒப்படைக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. 108 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்னர் உத்தியோகபூர்வ வாசஸ்தலங்கள் ஒதுக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார். தற்போது சுமார் 30 முன்னாள் எம்.பி.க்கள் தங்களுடைய வீடுகளை ஒப்படைத்துள்ளனர். 108 உத்தியோகபூர்வ இல்லங்களில் சுமார் 70 வீடுகளுக்கு புனரமைப்புப் பணிகள் நடைபெற்று...

எமக்கு கிடைத்த இந்த வெற்றி மக்களுக்கு கிடைத்த வெற்றி; இளங்குமரன்…

எமக்கு கிடைத்த இந்த வெற்றி மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும். புலம்பெயர் தேசத்தில் இருக்கின்ற உறவுகள் ஒன்றிணைந்து எமது நாட்டினை முன்னேற்றுவதற்கு முன்வர வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார். நேற்று சனிக்கிழமை (16) யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு...

வளமான வாழ்க்கைக்காகவும் தேசத்தின் நன்மைக்காகவும் அரசியல் பயணம் தொடரும் – கந்தசாமி பிரபு…

தேசிய மக்கள் சக்தி மீதும் ஜனாதிபதி அனுரா குமார திசாநாயக்கா மீதும் நம்பிக்கை வைத்து வாக்களித்த அனைத்து மட்டக்களப்பு மாவட்ட நன்றிகள் வழமான வாழ்க்கை தேசத்தின் நன்மைக்காகவும் மாவட்ட மக்களின் நன்மைக்காகவும் எங்கள் அரசியல் பயணம் தொடரும் என தேசிய மக்கள் சகதியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட கந்தசாமி பிரபு...
- Advertisement -spot_img

Latest News

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன 

2026 ஆம் ஆண்டிற்கான தேசிய பாடசாலைகளின் வருடாந்த மற்றும் கட்டாய ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பங்கள் தற்போது இணையம் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. http://nstt.moe.gov.lk என்ற...
- Advertisement -spot_img