Friday, July 17, 2026
No menu items!

நாடாளுமன்ற உறுப்பினர்

ஜனாதிபதி மீதுள்ள நம்பிக்கை குறைந்துவிட்டது – சாணக்கியன்..!

தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இதுவரையில் உரிய பதில் வழங்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதனால் ஜனாதிபதி மீதுள்ள நம்பிக்கை தற்போது படிப்படியாக குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்க் கட்சிகள் ஒற்றுமையாக பயணிக்காவிட்டால் மக்களால் புறக்கணிப்படுவர் – அடைக்கலநாதன்!

உள்ளூராட்சி மன்றங்கள் தேசிய மக்கள் சக்தியின் கைகளுக்குச் செல்லுமாயின் தமிழ்க் கட்சிகளும் தமிழர்களும் தமிழ்த் தேசியம் பற்றிப் பேசுவதற்கு அருகதையற்றவர்களாக மாறிவிடுவர் என ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார். தமிழ்க் கட்சிகள் ஓரணியில் ஒற்றுமையாக இனிவரும் காலங்களில்...

இந்தியாவுடன் ஏற்படுத்தி கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து கேள்வி எழுப்பிய நாமல்!

தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாடம் கற்பிக்கவுள்ளதாக தெரிவித்து ஆட்சியமைத்த அரசாங்கத்துக்கு தனி மனித பாதுகாப்பையேனும் உறுதிப்படுத்த முடியாமல் போயுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெலிமடை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தேசிய பாதுகாப்பு தொடர்பில் கருத்துரைத்த அரசாங்கத்தின் காலப்பகுதியிலேயே...

இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் ஜனாதிபதியாக சஜித் பிரேமதாச நியமிக்கப்படுவார்; கபீர் ஹாஷிம்!

எதிர்க்கட்சியும் சமகி ஜன பலவேகய (SJB) தலைவருமான சஜித் பிரேமதாச இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் ஜனாதிபதியாக நியமிக்கப்படுவார் என்று சமகி ஜன பலவேகய நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் ஒரு நிகழ்வில் உரையாற்றும் போது உறுதியளித்தார். அதிகாரிகளே சஜித் பிரேமதாசவிடம் அதிகாரத்தை ஒப்படைப்பார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் கூறினார். "மெதுவாகப் போவோம். நாம்...

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் – ஜனாதிபதிக்கு ஆலயம் கட்ட தயாராகும் ஜீவன்..!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மேலும் 1000 ரூபாய் வேதனத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஜனாதிபதியினால் முடியுமாயின், அவருக்கு ஆலயம் கட்டுவதற்கும் தாம் தயாராகவுள்ளாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். நோர்வூட் பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் தொடர்ந்தும் வேதனம் அதிகரிக்கப்படுவதை விடவும், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நிரந்தரத் தீர்வே அவசியமாகவுள்ளதெனவும், ஜீவன் தொண்டமான்...

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தாத ஜனாதிபதி – செல்வம் அடைக்கலநாதன்!

ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து 6 மாதங்களை கடக்கின்றது. இந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயங்களில் கவனம் செலுத்தவில்லை. தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டவர்கள் என்று சொல்லுகிறவர்கள் அதை கவனத்தில் எடுக்கவில்லை. ஐ.நா. சபை தீர்மானத்தை உடனடியாக கூறினீர்கள் அதை அமுல்படுத்த முடியாது என்று. இது தான் தமிழர்கள் மீது நீங்கள் காட்டுகிற அக்கறையா?...

கஜேந்திரகுமார் எம்.பிக்கு ஆதரவு வழங்கும் சரவணபவன்..!

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். சில விடயங்களுக்காக நான் காத்திருந்தேன். நான் ஏற்கனவே ஒரு கட்சியின் இருந்தேன், அங்கு ஏதாவது மாற்றம் ஏற்படுமா...

அரசாங்கம் ஈஸ்டர் தாக்குதலின் துயரத்தை அரசியல் கருவியாகப் பயன்படுத்துகிறது – நாமல் குற்றச்சாட்டு!

துரதிஷ்டவசமாக தற்போதைய அரசாங்கம் ஏப்ரல் 21 தாக்குதலின் துயரத்தை ஒரு அரசியல் கருவியாகப் பயன்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். தமது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை இட்டு இதனைத் தெரிவித்துள்ள அவர், தற்போது இடம்பெற்றுவரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைக்கு மத்தியில் உணர்ச்சிப்பூர்வமான பதில்களைத் தூண்டவும், பொது மக்களின் உணர்வுகளைக் கையாளவும் அரசாங்கம்...

பிள்ளையான்- உதய கம்மன்பில சந்திப்பு நாட்டில் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதற்கான சதி திட்டம் : கந்தசாமி பிரபு!

பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவருமான உதய கம்மன்பில அல்ல கம்மன்பிள்ளை பிள்ளையானுடன் சேர்ந்து இந்த நாட்டில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதுடன் இருவரது செயற்பாடுகளின் பின்னால் பெரிய ஒரு சதிதிட்டம் இருப்பதாக கருதுகின்றோம் என தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார். திசைகாட்டி சின்னத்தில் மட்டக்களப்பு மாநகரசபை...

பலாலி வீதி திறந்ததை குறித்து அரசாங்கத்தின் மீது கோபமடைந்த நாமல்!

தேர்தல்களை விட தேசத்தின் பாதுகாப்பிற்கே அரசாங்கம் முன்னுரிமையளிக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார். பலாலி வீதி திறக்கப்பட்டமை தொடர்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது- வடபகுதி மக்களின் உணர்வுகளுடன்  அசிங்கமான அரசியலில் ஈடுபடுவதை தேசிய மக்கள் சக்தி கைவிடவேண்டும். பலாலி வீதியை கடுமையான கட்டுப்பாடுகளுடன் அரசாங்கம் திறக்க தீர்மானித்துள்ளமை  உண்மையாகவே கரிசனையளிக்கின்றது. அந்த வீதி...
- Advertisement -spot_img

Latest News

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன 

2026 ஆம் ஆண்டிற்கான தேசிய பாடசாலைகளின் வருடாந்த மற்றும் கட்டாய ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பங்கள் தற்போது இணையம் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. http://nstt.moe.gov.lk என்ற...
- Advertisement -spot_img