Saturday, November 7, 2026
No menu items!

நிலநடுக்கம்

இன்று மீண்டும் மியன்மாரில் நில அதிர்வு..!

மியன்மாரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.54 மணியளவில் 5.6 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது என்றும் இதனால் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. உயிரிழப்புகள் அல்லது சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்!

இந்தோனேசியாவின் மேற்கு மாகாணமான ஆச்சேவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் வலிமை ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளது. இன்று (08) அதிகாலை 2.48 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  

பபுவா நியூகினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!

பபுவா நியூகினியாவின் மேற்கு நியூ பிரிட்டன் மாகாணத்தில் உள்ள கிம்பே (Kimbe) என்ற பகுதியிலிருந்து 194 கி.மீ (120 மைல்) கிழக்கு-தென்கிழக்கே சாலமன் கடலுக்கு அருகில், இன்று அதிகாலை 6:04 மணியளவில் 6.9 ரிக்டர் அளவு கொண்ட பயங்கர நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 33 கி.மீ ஆழத்தில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு...

3 ஆயிரத்தை தாண்டியது மியன்மாரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை..!

மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மியன்மாரில் கடந்த வெள்ளிக்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவான இந்த பயங்கர நிலநடுக்கம் தலைநகர் நேபிடாவ், மண்டலே ஆகிய நகரங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. மியன்மாரில் இடிந்து விழுந்த கட்டடங்களுக்குள் இருந்து குவியல் குவியலாக உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மியான்மர்...

மியான்மருக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்க இலங்கை அரசு முடிவு!

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர் மனிதாபிமான உதவியை வழங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மருத்துவக் குழுக்களும் சுகாதாரத் துறை ஆதரவும் வழங்கத் தயாராக இருப்பதாக வெளியுறவுத் துறை துணை அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா மேலும் தெரிவித்தார்.  

ஜப்பானில் மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு..!

ஜப்பான் உலகின் மிகவும் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய நாடுகளில் ஒன்றாகும். அங்கு "நங்காய் ட்ரஃப்" (Nankai Trough) என்ற நிலத்தடி பகுதியில் 8 முதல் 9 வரையிலான ரிக்டர் அளவில் ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்படுவதற்கு சுமார் 80% சாத்தியக்கூறு உள்ளதாக ரொய்டர்ஸ் செய்திச் சேவை சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது ஒரு மிகப்பெரிய நிலநடுக்கமாக (megaquake)...

மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கம் – 1000ஐ தாண்டிய உயிரிழப்பு எண்ணிக்கை..!

மியன்மாரை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 1000ஐ தாண்டியுள்ளது. இந்த எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டும் அபாயம் உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒரு நூற்றாண்டுக்கு பின்னர் மியன்மாரை தாக்கிய மிக சக்திவாய்ந்த நிலநடுக்கமாக இது பதிவாகியுள்ளது. இராணுவ ஆட்சியால் ஏற்கனவே நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் மியன்மார் மக்கள், இந்த நிலநடுக்கத்தால் மிகுந்த அழுத்தத்திற்கு...

மியான்மார் நில அதிர்வில் 694 பேர் உயிரிழப்பு..!

மியான்மாரில் நேற்று (28/03/2025) ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது. இதுவரை 694 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் 1,670 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நியூசிலாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கம்!

நியூசிலாந்தின் ஒரு தீவு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.7 ஆக பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் காரணமாக, கடற்கரைப் பகுதிகளை விட்டு மக்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம்; மக்கள் அச்சத்தில்!

நேபாளத்தில் இன்று (28) காலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானது. இது தலைநகர் காத்மாண்டுவிலிருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மத்திய நேபாளத்தின் சிந்துபால்சௌக் மாவட்டத்தின் பைரவ்குண்டா பகுதியில் நடந்தது. நேபாள நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம், உள்ளூர் நேரப்படி அதிகாலை 2:51 மணியளவில்...
- Advertisement -spot_img

Latest News

பரீட்சை சான்றிதழ்களுக்கான இணைய விண்ணப்ப சேவை இடைநிறுத்தம்

பரீட்சைகள் திணைக்களத்தின் இணைய சான்றிதழ் விண்ணப்ப சேவை 2026 நவம்பர் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது என பரீட்சைகள் திணைக்களம்...
- Advertisement -spot_img