பதுளை
News
வைத்தியரைக் கடத்திய ஆசிரியர்..!
40 இலட்சம் ரூபா கப்பம் பெறுவதற்காக வைத்தியர் ஒருவரை கடத்தி வீடொன்றில் அடைத்து வைத்திருந்த 28 வயதுடைய தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் வைத்தியரையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
பதுளை பிரதேசத்தை சேர்ந்த விசேட மகப்பேறு வைத்திய நிபுணரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த ஆசிரியர், வைத்தியரை தொலைபேசியில் மெட்டியகொடை பிரதேசத்திற்கு அழைத்து காரில்...
News
நாட்டின் ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை, கண்டி, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு இடம்பெறலாமென எச்சரிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பதுளை மாவட்டத்தின் மீகாஹாகிவுல, கேகாலை, மாத்தளை மாவட்டத்தின் கொடபொல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு, இரண்டாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்படுவதாக அறிக்கையில்...
News
இன்றும் சில பகுதிகளில் மழையுடனான வானிலை
கிழக்கு, வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.
வடமத்திய மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பதுளை மாவட்டங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்...
News
மலையக ரயில் தடம்புரண்டது : சேவைகளில் பாதிப்பு
பதுளை மற்றும் ஹாலி-எல ரயில் நிலையங்களுக்கிடையில் இன்று வெள்ளிக்கிழமை (29) சேவையிலிருந்த ரயில் தடம் புரண்டதால், மலையக ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.
பொடிமனிக்கே ரயிலின் என்ஜின் பகுதியும் பின்பெட்டியுமே இவ்வாறு தடம்புரண்டுள்ளது.
மேலும், அப்பகுதியில் நிலவும் மோசமான காலநிலை மற்றும் ரயில்ப்பாதையில் சேறும் சகதியுமாக காணப்படுவதால், ரயில்வே போக்குவரத்தில் தடைகள்...
News
பண்டிகை காலத்தில் அதிகரிக்கும் பாதுகாப்பு
எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த பொலிஸார் திட்டமிட்டுள்ளனர்.
அதற்காக பதில் பொலிஸ் மா அதிபர் ஏற்கனவே இரண்டு விசேட சுற்று நிருபங்களை வெளியிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
பொதுமக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் சிவில் உடையிலும் பொலிஸ் உத்தியோகத்தர்கள்...
News
விசேட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்ட 2,166 சந்தேகநபர்கள்
கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது 2,166 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 66 பேருக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன், 14 சந்தேகநபர்கள் தொடர்பில் சொத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும் 226 பேர் புனர்வாழ்வு மையத்திற்க்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார்தெரிவித்தனர்.
1கிலோ 370 கிராம் ஹெரோயின், 556...
News
நாட்டில் தொடரும் கன மழை..!
தீவின் பெரும்பாலான மாகாணங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும்,வடக்கு, வடமத்திய, கிழக்கு, தெற்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
வடமேல் மாகாணத்தில் காலையிலும் பல தடவைகள்...
News
மலையக விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் நியமனம்
மலையக தமிழ் மக்கள் தொடர்பான விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமனக் கடிதத்தினை ஜனாதிபதியின் செயலாளர் E.M.S.B.ஏக்கநாயக்கவினால் நேற்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நியமனக் கடித்தத்தில் மலையகத் தமிழர்களை இலங்கைச் சமூகத்தில் முழுமையாக இணைத்துக்கொள்வது குறித்து அறிக்கையிடுவதற்கான பொறுப்பும் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இவர் பதுளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பெருந்தோட்ட நிறுவனங்களுடனான நலன்புரி விடயங்கள், மகளிர் மேம்பாடு, சிறுவர் நலத்திட்டங்கள்,தமிழ் பாடசாலைகள் உள்ளிட்ட அனைத்து பாடசாலை சுகாதார சேவைகளை மேம்படுத்துதல் போன்ற விடயங்கள் தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரான வடிவேல் சுரேஷ் பதுளை மாவட்டத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகி பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
News
தொடரும் மழையினால் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை !
வங்காள விரிகுடாவின் மேற்குப் பகுதியின் மத்தியில் நிலைகொண்டிருந்த மிக்ஜான் சூறாவளியானது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் கரையை ஊடறுத்துள்ளதுடன் படிப்படியாக நலிவடைகின்றதென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது குறித்து சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் மேலும் கூறுகையில்,
மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையிலும், மத்திய, சப்ரகமுவ, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல்...
News
மண்சரிவு அனர்த்தத்தில் இருவர் பலி – பதுளையில் சம்பவம்
பதுளை – பண்டாரவளை வீதியின் உடுவரை 6 ஆம் கட்டைப் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக வீட்டினுள் இருந்த மூவர் மண்ணில் புதையுண்டனர்.
பதுளை மாவட்டத்தின் பதுளை, பண்டாரவளை, பசறை, ஹாலிஎல பகுதிகளில் நேற்று (22) பிற்பகல் தொடக்கம் பெய்து வரும் கடும் மழையின் காரணமாக மண்சரிவு இடம்பெற்றுள்ளது.
மண்மேடு சரிந்து...
Latest News
வீட்டில் தீ வைப்பு; உயிரிழப்புக்கள் அதிகரிப்பு
மகரகமையில் உள்ள இரண்டு மாடி கொண்ட வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூன்றாவது நபரும் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் அந்த வீட்டின்...


