Saturday, November 7, 2026
No menu items!

பாடசாலை

களுதாவளையில் வீடொன்றிலிருந்து குடும்பப் பெண் ஒருவர் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளை 4 ஆம் பிரிவு பாலர் பாடசாலை வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து குடும்பப் பெண் ஒருவர் சடலமாக செவ்வாய்க்கிழமை (24.09.2024) மாலை மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்டவர் 44 வயதுடைய சசிகுமார் கௌரி என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த வீட்டில் கணவன் மனைவி ஆகிய இருவரும் வசித்து வந்துள்ளனர்....

14 வயது மாணவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக பயிலுனர் ஆசிரியர் ஒருவர் கைது!

வவுனியாவில் 14 வயது மாணவன் ஒருவருக்கு பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக பயிலுனர் ஆசிரியர் ஒருவர் நேற்று (24.09.2024) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் கட்டுறு பயிலுனராக பணியாற்றிய கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 14 வயது மாணவன் ஒருவருக்கு குறித்த பயிலுனர்...

இன்றைய தினம் சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை!

நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் இன்றைய தினம் (20.09.2024) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இன்றைய தினம் மூடப்படும் சகல பாடசாலைகளும், எதிர்வரும் 23ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படும் எனக் கல்வி...

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தல்!

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு நாளை ( 20.09.2024) நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாளை மறுதினம் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரின் கோரிக்கைக்கு அமைய கல்வி அமைச்சு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. மேலும், 23ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும்...

அவசர சோதனைகளை மேற்கொள்ளுமாறும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு..!

ஜனாதிபதி வேட்பாளர்களை விளம்பரப்படுத்தும் வகையில் வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள அனைத்து ஸ்டிக்கர்களையும் உடனடியாக அகற்றுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 1981 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல் சட்டத்தின் 74 ஆவது பிரிவின் கீழ் அது குற்றமாகும் என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. தனியார் பஸ்கள், முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட தனியார் வாகனங்களில் ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும்...

ஜனாதிபதி தேர்தலை  முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை !

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு வசதியாக பாடசாலைகளை மூடுவது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவிடமிருந்து கல்வி அமைச்சுக்கு முறையான கடிதம் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குப் பின்னர் வாக்கு எண்ணும் நிலையங்களைத் தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அந்த கடிதத்தில், வாக்குப்பதிவு மையங்களாக நியமிக்கப்பட்ட பாடசாலைகள் இம்மாதம் 19 மற்றும்...

இரு மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பாடசாலை அதிபர் கைது….!

கதிர்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்கும் இரண்டு மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் பாடசாலை அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கதிர்காமம் பொலிஸாருக்கு நேற்று வியாழக்கிழமை (22) கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பேரிலேயே குறித்த 49 வயதுடைய பாடசாலை அதிபர் இவ்வாறு கைது...

சிறுமிகளுக்கு ஆபாசபடம் காட்டி வந்த 57 வயதுடைய பாடசாலை அதிபர் கைது!

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 5ம் ஆண்டில் கல்விகற்றுவரும் சிறுவர்களுக்கு கையடக்க தொலைபேசியில் ஆபாச படம் காட்டி வந்த 57 வயதுடைய பாடசாலை அதிபர் ஒருவரை நேற்று புதன்கிழமை (21) இரவு கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த பொலிஸ் பிரிவிலுள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் தரம் 5ம் ஆண்டில்...

பாடசாலைகளுக்கு இரண்டாம் தவணை விடுமுறை எப்போது…?

இந்த ஆண்டுக்கான இரண்டாம் தவணை பாடசாலை கற்கைகள்  நிறைவடைவது தொடர்பாக கல்வி அமைச்சினால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,  பாடசாலைகளின் இரண்டாம் தவணை ஆகஸ்ட் 16ம் திகதி வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்து  மூன்றாம் தவணைக்கான கல்வி செயற்பாடுகள் எதிர்வரும் ஆகஸ்ட் 26ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கல்வி  அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

வவுனியா கோமரசன்குளம் பாடசாலையில் சரஸ்வதி மற்றும் மாதா சிலைகள் அமைக்க எடுத்த முயற்சியால் குழப்பநிலை!

வவுனியா, கோமரசன் குளம் பகுதியில் பாடசாலை ஒன்றில் இந்து வணக்க சிலை வைப்பதற்கு அனுமதிக்க முடியாது என பாடசாலை அபிவிருத்தி சங்கம் தெரிவித்த நிலையில் அங்கு குழப்ப நிலை நீடித்து வருகின்றது. வவுனியா, கோமரசன்குளம் மகாவித்தியாலயத்தில் அதிகமாக இந்து மாணவர்கள் கல்வி கற்று வருவதுடன், குறித்த பாடசாலை காணப்படும் அயலில் கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். குறித்த பாடசாலையில் இந்து மற்றும் கிறிஸ்தவம் என்பவற்றுக்கான காலை பிரார்த்தனை வழிபாட்டிடங்கள் கடந்த 8 வருடங்களுக்கு மேலாக காணப்பட்டு வரும் நிலையில் அதில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த இந்து வழிபாட்டு படங்கள் பழுதடைந்து காணப்படுகின்றன. பாடசாலையின் பழைய மாணவர்கள் இந்து மாணவர்களின் வழிபாட்டிற்காக சரஸ்வதி சிலை ஒன்றினை சிறிதாக வைப்பதற்கும் கிறிஸ்தவ மாணவர்களுக்கு மாதா சிலை ஒன்று வைப்பதற்கும் தீர்மானித்திருந்தனர். குறித்த பாடசாலையில்  மத சிலையை வைக்க கூடாது எனவும் இது கிறிஸ்தவம், இந்து மதங்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் எனக் கூறி  அப் பகுதி மதபோதகர் உட்பட சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பில் அப்பகுதி மத போதகரால் கடிதம் ஒன்றும் பாடசாலைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பாடசாலை அபிவிருத்திச் சங்கம் இந்து சிலை அமைக்க அனுமதி வழங்க மறுத்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் வவுனியா தெற்கு வலயத்தின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பழைய மாணவர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த பாடசாலையில் இரு மத சிலைகளும் வைப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் இந்து பிள்ளைகள் அதிகமாக கற்கும் பாடசாலையில் வழிபாட்டு உரிமை இல்லையா எனவும் பழைய மாணவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
- Advertisement -spot_img

Latest News

 மக்கள் கலந்துரையாடல் இன்றி சில சட்டங்கள் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுத்தல் சட்டமூலம் ஆகியவற்றை முதலில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தாது பாராளுமன்றத்தில்...
- Advertisement -spot_img