கதிர்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்கும் இரண்டு மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் பாடசாலை அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கதிர்காமம் பொலிஸாருக்கு நேற்று வியாழக்கிழமை (22) கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பேரிலேயே குறித்த 49 வயதுடைய பாடசாலை அதிபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

08 மற்றும் 09 ஆம் வகுப்புகளில் கல்வி கற்கும் இரண்டு மாணவர்களே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும்  சந்தேக நபரான அதிபர் கடந்த 2021 ஆம் ஆண்டில் ஒரு மாணவனையும் ,2023 ஆம் ஆண்டில் மற்றைய மாணவனையும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக இந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இரு மாணவர்களும் விளையாட்டு செயற்பாடுகளுக்காக பாடசாலைக்கு சென்றிருந்த போது உணவு உண்பதற்கு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள அறையொன்றிற்குள் வைத்து இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக குறித்த முறைப்பாட்டில் மேலும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கதிர்காமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here