எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு வசதியாக பாடசாலைகளை மூடுவது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவிடமிருந்து கல்வி அமைச்சுக்கு முறையான கடிதம் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குப் பின்னர் வாக்கு எண்ணும் நிலையங்களைத் தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அந்த கடிதத்தில், வாக்குப்பதிவு மையங்களாக நியமிக்கப்பட்ட பாடசாலைகள் இம்மாதம் 19 மற்றும் 20ஆம் திகதிகளில் தயார்படுத்தப்படும் என்று ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கைகளை பரிசீலித்து தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக கல்வி அமைச்சு முன்னர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.








